ஆட்டோ எல்பிஜி கியாஸ் விலை வரலாறு காணாத உயர்வு: வாடகை வாகன ஓட்டுனர்கள் கவலை!

ஆட்டோ எல்பிஜி கியாஸ் விலை வரலாறு காணாத உயர்வு: வாடகை வாகன ஓட்டுனர்கள் கவலை!

வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோ எல்பிஜி கியாஸ் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளதால் வாடகை வாகன ஓட்டுனர்கள் கவலையடைந்துள்ளனர்.

 • Share this:
  பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்பிஜி கியாஸ்-ஐ பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தங்களது ஆட்டோக்களை கியாஸ் ஆட்டோக்களாக மாற்றி ஓட்டி வருகின்றனர்.

  மேலும், பெட்ரோல் விலை உயர்வால் சமாளிக்க முடியாத வாடகை கார் உரிமையாளர்கள் பலர் அதனை எல்பிஜி கியாஸில் இயங்கும் வாகனங்களாக மாற்றியமைத்து பயன்படுத்தி வருகின்றனர். பிஎஸ்-4 வகையை சேர்ந்த இந்த கார்களை எல்பிஜி கியாஸ் வாகனங்களாக மாற்ற இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதுபோன்று கியாஸ் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.

  Also read: E-rupi: ‘இ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?

  கடந்த ஜூலை மாதம் ஒரு லிட்டர் ஆட்டோ கியாஸின் விலை 50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு 5 ரூபாய் 41 காசுகள் அதிகரித்துள்ளது.

  அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் கியாஸ் விலை 55 ரூபாய் 51 காசுகளாகவும், மதுரையில் 54 ரூபாய் 41 காசுகளாகவும் உள்ளது.

  கடந்த ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் ஆட்டோ கியாஸ் விலை 32 ரூபாய் 02 காசுகளாக இருந்தது. அது படிப்படியாக உயர்ந்து கடந்த 14 மாதங்களில் 56 ரூபாயை எட்டியுள்ளதால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தங்களது வாழ்வாதாரத்தை காக்க எல்பிஜி கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அதேநேரத்தில் ஒரு லிட்டர் சிஎன்ஜி கியாஸ் விலை 51 ரூபாயாக உள்ளதால், அதனை கார்களில் பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: