Home /News /business /

10%க்கு குறைவான வட்டி.. டூவீலர் லோன் எடுக்கும் ஐடியா இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம்!

10%க்கு குறைவான வட்டி.. டூவீலர் லோன் எடுக்கும் ஐடியா இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனியார் வங்கிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் அமைப்புகளில் ஆக்சிஸ் வங்கி முதலிடத்தில் இருக்கிறது.

    2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அதே சமயத்தில் டூ வீலர்களின் விற்பனை அமோகமாக இருந்தது. அதே சமயம், வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வகையில், இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வாகனம் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் தேவை என வைத்து கொண்டால், மூன்றாண்டுகள் தவணையுடன் ஆண்டுக்கு 6.85 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது.

    எஸ்பிஐ :

    இரு சக்கர வாகனக் கடனைப் பொறுத்தவரையில், பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தான் இருப்பதிலேயே மிகக் குறைவான வட்டிக்கு கடன் வழங்குகிறது. வீட்டுக் கடனுக்கு வழங்கப்படுவதை போல, இரு சக்கர வாகனங்களுக்கு 6.85 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையில், ரூ.1 லட்சம் கடனை மூன்று ஆண்டுகள் தவணையில் பெறுகிறபோது மாதாந்திர தவணை தொகையாக ரூ.3,081 வசூல் செய்யப்படுகிறது.

    சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :

    பட்டியலில் எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இங்கு, 7.25 சதவீத வட்டியில் இரு சக்கர வாகனங்களுக்கான கடன் தொகையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர தவணை தொகை ரூ.3,099 ஆகும்.

    வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஹோம் லோன் வாங்கலாமா?

    ஜம்மு & காஷ்மீர் வங்கி :

    ஜம்மு & காஷ்மீர் வங்கியில் 3 ஆண்டுகள் வரம்பில் ரூ.1 லட்சம் கடன் பெற்றால், அதற்கான வட்டித் தொகை 8.45 சதவீதம் ஆகும்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி :

    இரு சக்கர வாகனங்களுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்குவதில் மற்ற நிதி நிறுவனங்களைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் தான் முன்னணியில் இருக்கின்றன. ஒரு லட்சம் கடனுக்கு மாத தவணை ரூ.3,171 என்ற வகையில் 8.8 சதவீத வட்டியுடன் இங்கு கடன் வழங்கப்படுகிறது.

    ஆக்சிஸ் வங்கி :

    தனியார் வங்கிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் அமைப்புகளில் ஆக்சிஸ் வங்கி முதலிடத்தில் இருக்கிறது. இங்கு 9 சதவீத வட்டித் தொகையுடன் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது என்றால், மாதாந்திர தவணை தொகை ரூ.3,180 ஆகும். கனரா வங்கியிலும் இதே வட்டித்தொகை அளவில் கடன் கிடைக்கிறது.

    சொந்த வீடு கட்ட லோன் வாங்குவது இவ்வளவு ஈஸியா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

    யூனியன் பேங்க் ஆப் இந்தியா :

    10 சதவீதத்திற்கு குறைவான வட்டித் தொகையில், டூ வீலர்களுக்கு கடன் வழங்கும் நிதி அமைப்புகளின் பட்டியலில் கடைசியாக இருப்பது யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகும். இங்கு ரூ.1 லட்சம் கடனுக்கான மாதாந்திர தவணை தொகை ரூ.3,222 ஆகும்.

    அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. இணையதளங்களில் தகவல்களை குறிப்பிடாத வங்கிகள் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதில் உள்ள டேட்டா அனைத்தும் ஏப்ரல் 13ஆம் தேதி நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank Loan, SBI

    அடுத்த செய்தி