Home /News /business /

சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு.. உணவுப் பொருட்களின் விலை நிலவரம் என்ன.?

சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு.. உணவுப் பொருட்களின் விலை நிலவரம் என்ன.?

Retail Inflation Rise | இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.71 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Retail Inflation Rise | இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.71 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Retail Inflation Rise | இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.71 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பலவும் கடுமையாக முயன்று வருகின்றன. இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து 3 முறை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இருப்பினும் உணவுப்பொருட்கள் மீதான விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.09.2022) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உணவுப் பொருட்களின் விலை உயர்வே ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் இந்த அளவிற்கு உயர காரணமாக அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் விலை உயர்வால் கடந்த ஜூலை மாதம் 6.75 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளில் ஏற்பட்ட விலை உயர்வு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் சில்லறை பணவீக்கம் 13.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Also Read : டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உணவுப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புற பணவீக்கம் 6.8 சதவீதத்தில் இருந்து 7.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் நகர்ப்புற பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.49 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 6.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.



தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) களப்பணியாளர்கள் வாராந்திர அடிப்படையில் உணவு மற்றும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து சேகரித்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 1,114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1,181 கிராம சந்தைகளில் இருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது 99.9 சதவீத கிராமங்கள் மற்றும் 98.4 சதவீத நகர்ப்புற சந்தைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கணித்துள்ளது.

Also Read : “குறைந்த வட்டியுடன் கடன் வழங்கும் கிசான் கிரெடிட் கார்டு” - ஈஸியா ஆன்லைனில் அப்ளே செய்யும் முறை இது தான்.!

எந்தெந்த பொருட்கள் விலை உயர்ந்தது?

காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காலணிகள் மற்றும் 'எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. முட்டை, புரதம் நிறைந்த இறைச்சி மற்றும் மீன்களின் விலையில் பெரிதாக மாற்றமின்றி தொடர்ந்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: India, Reserve Bank of India, Vegetable price

அடுத்த செய்தி