இன்றைய (ஆகஸ்ட் 16, 2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மாதிரி படம்

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம் செய்யப்படவில்லை.

 • Share this:
  சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

  பெட்ரோல், டீசல் விலை தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

  பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநிலத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று இரவு முதலே அது நடைமுறைக்கு வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  Must Read : எத்தனை முறை யூஸ் பண்ணாலும் கட்டணம் இல்லை.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் சூப்பரான அப்டேட்!

  அதன்படி, கடந்த 2 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39-க்கும் விற்பனையானது. அதேபோல, இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  Published by:Suresh V
  First published: