ஹோம் /நியூஸ் /வணிகம் /

7 ஆண்டுகளுக்கு பிறகு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ள ரிசர்வ் வங்கி

7 ஆண்டுகளுக்கு பிறகு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ள ரிசர்வ் வங்கி

ஏடிஎம்

ஏடிஎம்

இந்த புதிய உயர்வு விகிதங்கள் பணம் மறுசுழற்சி இயந்திரங்களில் (Cash Recycler Machines) செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் (கேஷ் டெப்பாசிட் ட்ரான்ஷாக்ஷன்ஸ் தவிர) பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் சில மாற்றங்களை ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால் விரைவில் ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து பணத்தை எடுக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால் அடுத்த மாதத்திலிருந்து வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டண கட்டமைப்பை (interchange fee structure) அதிகரிக்க உள்ளன. வரும் ஆகஸ்ட் 1 முதல் வங்கிகள் தங்களது பரிமாற்ற கட்டணத்தை அதிகரித்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களை பயன்பாட்டில் வைத்திருக்கவும், இந்த இயந்திரங்களை முறையாக பராமரிக்க ஆகும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும் நிதி பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15-லிருந்து, ரூ.17-ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதே போல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான (non-financial transactions) பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-லிருந்து, ரூ.6-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய உயர்வு விகிதங்கள் பணம் மறுசுழற்சி இயந்திரங்களில் (Cash Recycler Machines) செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் (கேஷ் டெப்பாசிட் ட்ரான்ஷாக்ஷன்ஸ் தவிர) பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. பரிமாற்ற கட்டணம் (Interchange fees ) என்பது ஒரு வாடிக்கையாளர் தனது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தும் போதெல்லாம் வணிகரின் வங்கிக் கணக்கு செலுத்த வேண்டிய பரிவர்த்தனை கட்டணம் ஆகும். ஒரு யூஸர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை சாராத ஏடிஎம்-மில் பரிவர்த்தனை செய்யும் போது. கார்டு வழங்கியுள்ள வங்கி குறிப்பிட்ட பிற ஏடிஎம் ஆபரேட்டருக்கு ஒரு பரிமாற்றக் கட்டணத்தை செலுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.15, ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கும் ரூ.5 என வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டு கொடுத்துள்ள வங்கி பரிமாற்ற கட்டணம் செலுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் வங்கிகள் அல்லது வொயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களால் ஏற்படும் பராமரிப்பு கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே தான் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர 2019-ல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறுஆய்வு செய்தது. கிட்டத்தட்டஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி தற்போது உயர்த்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்-களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை வரை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம். நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இதில் அடங்கும். இந்த வரம்பை தாண்டி வாடிக்கையாளர் ஏடிஎம்-களை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கூடுதலாக ரூ.20 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பிற வங்கி ஏடிஎம்-களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்ரோ சிட்டி என்றால் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள், மெட்ரோ அல்லாத ஏடிஎம் சென்டர்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Also read... வங்கி வாடிக்கயைாளர்கள் கவனத்திற்கு... 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி மேற்காணும் இலவச வரம்பை தாண்டி ஏடிஎம்-களில் பணம் எடுப்போருக்கான இந்த பரிமாற்றக் கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20-லிருந்து ரூ.21-ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணம் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் முதல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சென்னை உட்பட ஆறு மெட்ரோ இடங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை) ஒரு மாதத்தில் இலவசமாக கிடைக்கும். மற்ற இடங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும். இலவச வரம்பைத் தாண்டும் நிதி பரிவர்த்தனைக்கு அடுத்த மாதத்திலிருந்து ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.50 வசூலிக்கும். இந்த கட்டணங்கள் சில்வர், கோல்டு, மேக்னம், டைட்டானியம் மற்றும் வெல்த் அட்டைதாரர்களுக்கு பொருந்தும்.

First published:

Tags: ATM, ATM services