எத்தனை முறை ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை! இந்த வங்கியில் மட்டுமே சாத்தியம்

கட்டணம் இல்லை

பணம் எடுத்தாலும் அல்லது பணத்தை மற்ற கணக்குக்கு மாற்றினாலும் அவர்களிடம் எந்தவித கட்டணத்தையும் வங்கி வசூலிக்காது.

 • Share this:
  வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு எத்தனை முறை ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இந்த வங்கியில் அதற்காக கட்டணம் இல்லை தெரியுமா?

  ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமான இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் வங்கிகு சென்று பணம் எடுப்பதையே மறந்துவிட்டனர். பெரிய அளவிலான தொகை என்றால் தான் வங்கிக்கு சென்று எடுப்பது. மற்றப்படி எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனை அல்லது ஏடிஎம்மில் எடுத்து கொள்வது. அதிலும் தேவைப்படும் போதெல்லாம் ஏடிஎம் pos இயந்திரத்தில் ஸ்வைப் செய்வதையே சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இதை நன்கு புரிந்து வைத்துள்ள வங்கிகள் 3 முறை அல்லது 5 முறைக்கு மேல் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியை தவிர மற்ற ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கின்றன. ஆர்.பி.ஐ விதிப்படியே இதை பின்பற்றுக்கின்றன.

  ஆனால் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இதுக்குறித்த கவலை இல்லை தெரியுமா? மற்ற வங்கி ஏடிஎம்மில் எத்தனை முறை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தாலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் இல்லை என்ற முறையை இந்த வங்கி செயல்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல் இந்த வங்கியில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கும் எந்த வித வரம்பும் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற பரிவர்த்தனை வசதியை உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வழங்குகிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் எத்தனை முறை பணம் எடுத்தாலும் அல்லது பணத்தை மற்ற கணக்குக்கு மாற்றினாலும் அவர்களிடம் எந்தவித கட்டணத்தையும் வங்கி வசூலிக்காது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆர்பிஐ விதிப்படி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மெட்ரோ நகரம் மற்றும் கிராம முறையே 3 அல்லது 5 முறை அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி ஏடிஎம் தவிர மற்ற வங்கி ஏடிம்மில் இலவசமாக பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. அதற்கு மேல் தாண்டும் போதும் ரூ. 10 முதல் ரூ. 20 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் அப்படி எந்த விதிமுறைகளும் வாடிக்கையாளர்களுக்கு இல்லை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: