எக்கச்சக்கமான டிஜிட்டல் கட்டண முறைகள் வந்து விட்டாலும், ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் இருக்கிறது. சில இடங்களில் பணம் கொடுத்து தான் பொருட்களை வாங்க வேண்டும். தேவையான போது பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற பழக்கம் பரவலாக உள்ளது. ஆனால், இனி தேவைப்படும் போதெல்லாம் அல்லது விரும்பும்போதெல்லாம் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது.
ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு இனி வங்கிகளால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறை தான் ஏடிஎம் பயன்படுத்த முடியும், அதை மீறினால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஜனவரி 1 2002 முதல் அமல் படுத்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் ஏடிஎம் பயன்படுத்தும் அனைத்து நபர்களுக்கும் ஜனவரி 1 2002 முதல் இந்த விதி பொருந்தும். ஒரு நபர் கட்டணமில்லாமல் ஏடிஎம்மை எவ்வளவு முறை பயன்படுத்தலாம் என்ற எந்த வரைமுறையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பின்படி ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த 5 இலவச பரிவர்த்தனை எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ, அந்த வங்கியின் ஏடிஎம்களில் மேற்கொலப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
also read.. அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லை.. போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டை ஆன்லைனில் தொடங்குவது ரொம்ப ஈஸி!
ஏடிஎம்மில் ரொக்கமாக பணம் எடுத்தாலும் அதில் பணம் இல்லாத பரிவர்த்தனைகள் செய்தாலும், 5 பரிவர்த்தனைகள் வரை தான் இலவசம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. உதாரணமாக, மினி ஸ்டேட்மென்ட் பிரிண்ட் செய்வது அல்லது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி வேறு நபருக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளும் இதில் அடங்கம்
இதை தவிர்த்து மெட்ரோ நகரங்களில், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் அல்லாத வேறு வங்கிகளில் மாதம் 3 முறை இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் மற்றும் மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் மாதம் ஐந்து முறை பரிவர்த்தனைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.
இந்த வரம்பை மீறுபவர்கள் கணக்கில், ஒரு பரிவர்த்தனைக்கு இருபத்தி ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் ஏடிஎம் விதிகளின் வரம்பின் படி ஒரு பரிவர்த்தனைக்கு இருபது ரூபாய் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க.. அவசியமான தகவல்.. போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை என்ன?
கேஷ் ரீசைக்ளர் மிஷின்களிலும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று சென்ட்ரல் வங்கி தெரிவித்துள்ளது. வரம்பு மீறும் பரிவர்த்தனைகளுக்கு வரிகள் இல்லாமல் ரூ.21 வசூலிக்கப்படும்.
ரிசர்வ் வங்கி நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் இதைப்பற்றிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன் அடிப்படையில் HDFC மற்றும் ஆக்சிஸ் வங்கி தங்களின் வலைதளங்களில் இதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே உள்ள வரையறையை மீறி ஏடிஎம் பயன்படுத்துபவர்களுக்கு, ஏடிஎம்மின் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும், ரூ. 21 + வரிகள் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்க்ஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.