ஹோம் /நியூஸ் /வணிகம் /

ATM charges : ஜனவரி 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்.. வாடிக்கையாளர்களே உஷார்!

ATM charges : ஜனவரி 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்.. வாடிக்கையாளர்களே உஷார்!

ஏ.டி.எம் கட்டணம்

ஏ.டி.எம் கட்டணம்

ATM பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ATM பரிவர்த்தனை கட்டணம் ஜனவரி 1, 2022 முதல் மாறுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கண்டிபாக இந்த தகவலை தெரிந்து வைத்து கொள்ளவும்.

  அவசரத்திற்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க பெரும்பாலான மக்கள் ஏடிஎம் மையம் செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் அடுத்த மாதம் முதல் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் கொஞ்சம் அதிக செலவழிக்க வேண்டியிருக்கும் போல. ரிசர்வ் வங்கி கொடுத்திருக்கும் புதிய அறிவிப்பு தான் இதற்கு மிக முக்கிய காரணம்.

  ஏற்கெனவே ஒவ்வொரு வங்கியும் ஏ.எடி.எம் பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கிறது. இதில் ஜி. எஸ்.டி கட்டணமும் அடங்கும். அடுத்த மாதம் முதல் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தில் இருந்து சற்று கூடுதல் கட்டணத்தை வங்கிகள் இனி வசூலிக்கும்.

  கடந்த ஜூன் மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி வங்கிகள் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

  வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 5 முறை இலவசமாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரா அல்லாத மையங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். தற்போது வரை நடைமுறையில் இருக்கும் பழக்கம் இதுதான் இந்நிலையில். ஏடிஎம் பராமரிப்பு செலவுகள் காரணமாக வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

  Must Read : HDFC வங்கியில் பிக்சட் டெபாசிட் தொடங்கினால் லாபம் நிச்சயம்.. ஏன் தெரியுமா?

  அதாவது 5 முறைக்கு மேலாக பணம் எடுத்தால் அதற்கான கட்டண தொகையை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜி. எஸ்.டி கட்டணம் ரூ. 8 செலுத்த வேண்டும். பணமில்லா பரிவர்த்தனைக்கும் இனி 5 முறைக்கு மேலாக சென்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜவரின் 1 2022 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிட்டால் அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம். இந்த கட்டண உயர்வை ஏற்கெனவே ஒரு சில வங்கிகள் அறிவித்துவிட்ட நிலையில் வரும் நாட்களில் மற்ற வங்கிகள் கட்டண அறிவிப்பை வெளியிட உள்ளன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: ATM