முகப்பு /செய்தி /வணிகம் / இனி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம்! தெரியுமா?

இனி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம்! தெரியுமா?

ஏடிஎம்

ஏடிஎம்

ஏடிஎம்-களில் கார்ட்லெஸ் வித்ட்ராவல் வசதி என்பது தற்போது ஒருசில வங்கிகளில் மட்டும் அமலில் இருக்கிறது

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் சேவையை விரைவில் வழங்க உள்ளன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  (நேற்று) வெள்ளிக்கிழமை அறிவித்தார். கார்டுக்கு பதிலாக யூபிஐ வசதியை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம். 2022 - 2023 நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களுக்கான நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைப் பற்றி ஆளுநர் கூறுகையில், “ஏடிஎம்-களில் கார்ட்லெஸ் வித்ட்ராவல் வசதி என்பது தற்போது ஒருசில வங்கிகளில் மட்டும் அமலில் இருக்கிறது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் யூபிஐ சேவையைப் பயன்படுத்தி கார்ட்லெஸ் வித்ட்ராவல் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான பரிவர்த்தனை வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பரிவர்த்தனைகளுக்காக அவர்கள் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. கார்டு ஸ்கிம்மிங், கார்டு குலோனிங் போன்ற முறைகேடுகளை தடுக்க இது உதவிகரமாக இருக்கும்’’ என்றார் அவர்.

நாட்டில் சில வங்கிகள் ஏற்கனவே கார்ட்லெஸ் வித்ட்ராவல் வசதியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், நாட்டில் உள்ள பேமெண்ட் சிஸ்டம் ஆப்ரேட்டர்களுக்கு சைபர் செக்யூரிட்டி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Digital banking சேவை என்றால் என்ன? அது செயல்படும் விதம் குறித்த விவரம்!

இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில், “அனைவரையும் நிதி சார்ந்த வட்டத்திற்குள் கொண்டு வரவும், நிதி சார்ந்த ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் பேமெண்ட் சிஸ்டம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்து வரும் அபாயங்களை எதிர்கொள்ளும் வகையில் நமது பேமெண்ட் சிஸ்டம் என்பது வலுவானதாக இருக்கும் வகையில், குறிப்பாக சைபர் செக்யூரிட்டியை மேம்படுத்தும் வகையில், பேமெண்ட் சிஸ்டம் ஆப்பரேட்டர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட உள்ளன. அதில் சைபர் ரீசைலன்ஸ் மற்றும் பேமெண்ட் செக்யூரிட்டி கண்ட்ரோல் போன்றவை இடம்பெறும்.

pmkisan status : ரூ. 2000 எப்போது கிடைக்கும்? வெளியானது முக்கிய அப்டேட்!

வைப்ரண்ட் ஃபோரெக்ஸ்

நாட்டில் எக்ஸ்டெர்னல் இன்டிகேட்டர்ஸ் வளர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவின் ஃபோரெக்ஸ் என்பது 605.5 பில்லியன் டாலராக உள்ளது. அதே சமயம், நமது எக்ஸ்டெர்னல் இண்டிகேடார்ஸ் என்பது கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக உள்ளதுடன், குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நமது அந்நிய செலாவணி கையிருப்பு என்பது 2022 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி 606.5 பில்லியன் டாலராக உள்ளது. உள்நாட்டு நிதி சார்ந்த மார்க்கெட்டுகளில் நிலையான தன்மை நீடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

வங்கிக் கிளைகளில் கார்ட்லெஸ் வித்ட்ராவல்

எஸ்பிஐ, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள், அவற்றின் வங்கி ஆப்-கள் மூலமாக கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கி வருகின்றன. ஆனால், இந்த வசதியானது தொடர்புடைய வங்கிகளின் ஏடிஎம்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: ATM Card, ATM services, RBI, SBI ATM