Home /News /business /

இன்று முதல் ATM கார்டை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை! வந்திருக்கும் ரூல்ஸ் அப்படி

இன்று முதல் ATM கார்டை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை! வந்திருக்கும் ரூல்ஸ் அப்படி

ஏடிஎம் கட்டணம்

ஏடிஎம் கட்டணம்

ATM card : வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை வரம்புகளின் கீழ் பணம் எடுத்தால் இந்த கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    புது வருடம் 2022 பிறந்து விட்டது. இந்த வருடத்தில் பல மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன. அதில் மிக மிக முக்கியமானது ஏடிஎம் கட்டணம். இன்று முதல் ஏடிஎம் கட்டணத் தொகையில் மிகப் பெரிய மாற்றம் அமலுக்கு வருகிறது. அதைப் பற்றி மீண்டும் ஒருமுறை நினைவூட்டும் பதிவு.

    இன்று முதல் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு 21 ரூபாய் வரி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இலவச ஏடிஎம் பயன்பாட்டை தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு மட்டுமே 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
    தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ பேங்க் , ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இன்று முதல் ஜனவரி 1 (2022) இவை அமலுக்கு வருகின்றன. அதே போல் பல்வேறு வங்கிகளில் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வெவ்வேறு முறையில் இருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை வரம்புகளின் கீழ் பணம் எடுத்தால் இந்த கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    also read.. போஸ்ட் ஆபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகம்!

    தற்போது நடைமுறையில் இருக்கும் இலவச நடைமுறைகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் தங்களது சொந்த வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறை இலவச ஏடிஎம் சேவையும், பெரு நகரங்களில் இருக்கும் மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 இலவச பரிமாற்றங்களும், பெரு நகரங்கள் அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.இவை வங்கியால் வாடிக்கையாளர்கலுக்கு வழங்கப்படும் ஏடிஎம் சலுகை. இதை தாண்டும் போது தான் ரு. 21 கட்டணம்.

    also read.. SBI நகைக்கடனில் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்! ஏன் தெரியுமா?

    ஹெச்டிஎஃப்சி வங்கியைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக 5 முறை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மூன்று முறை மட்டும் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரையில், இலவச வரம்பைத் தாண்டில் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் 21 ரூபாய் கட்டணம். ஆக்சிஸ் ஏடிஎம் அல்லது மற்ற ஏடிஎம்களில் பேலன்ஸ் செக்கிங் போன்ற சேவைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: ATM, ATM Card, Bank

    அடுத்த செய்தி