Home /News /business /

இத்தனை வருஷமா ATM கார்டு யூஸ் பண்றீங்களே இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இத்தனை வருஷமா ATM கார்டு யூஸ் பண்றீங்களே இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஏடிஎம் கார்டு

ஏடிஎம் கார்டு

ATM card : 4 இலக்க எண்களை பயன்படுத்தும் போது ஹேக்கர்கள் அதனை ஹேக் செய்யும் வாய்ப்பிற்கான அளவு 20 சதவீதமாக இருந்தது.

  மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நமது ஏடிஎம் கார்டுக்கு ஏன் 4 இலக்க பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான விளக்கம் இதோ

  சோஷியல் மீடியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த கணக்கை ஆரம்பிக்க வேண்டியிருந்தாலும், அதற்கான பாஸ்வேர்ட் மிகவும் சிக்கலான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். அதிக பாதுகாப்பை உருவாக்குவதற்காக சோஷியல் மீடியா பாஸ்வேர்ட் அனைத்துமே எண், எழுத்து, குறியீடுகள் ஆகியவற்றை கொண்ட கலவையாக இருக்கும்.

  இந்த சோஷியல் மீடியா ஆப்களை எல்லாம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் செக்யூரிட்டி லாக் கூட பேட்டன் லாக், நெம்பர் லாக், கண் கருவி ஸ்கேன், யூஸரின் முகத்தை ஸ்கேன் செய்வது, கைவிரல் ரேகை என பல வகையான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்கும் வங்கிகள், பணப்பரிவர்த்தைக்காக வழங்கும் ஏடிஎம் கார்டுகளில் எப்போதுமே 4 இலக்க பாஸ்வேர்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அரசு, தனியார் என அனைத்து வகை வங்கிகளுமே இந்த ஒரே நடைமுறையை தான் பின்பற்றுகின்றன. அது ஏன் தெரியுமா?

  இதையும் படிங்க.. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே போஸ்ட் ஆபீஸ் இதை செய்கிறது!

  ஸ்காட்லாந்து விஞ்ஞானியான ஜான் அட்ரியன் ஷெப்பர்ட் பாரோன் 1969ம் ஆண்டு ஏடிஎம் அல்லது ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷினைக் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில், ஜான் இந்த இயந்திரத்தில் குறியீட்டு முறையை நிறுவும் போது, ​​அவர் 6 இலக்கங்களைப் பயன்படுத்த விரும்பினார், ஆனால் அப்போது தான் அவர் ஒன்றை கவனித்தார்.

  இதையும் படிங்க.. 45 வயதில் Home Loan பெற முயற்சி செய்கிறீர்களா? இதைச் செய்தால் சக்சஸ் ஆகும்

  அதாவது அவரது மனைவி கரோலினிடம் ஒவ்வொருமுறை ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பும் போதும் அவர் 4 இலக்க எண்களை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறார். கடைசியில் இருந்த இரண்டு இலக்க எண்ணை அவரால் நினைவில் கொள்ள முடியவில்லை. தனது மனைவியின் இந்த நியாபக மறதி, அனைத்து மனிதர்களுக்கும் இயல்பானதே, மனிதனால் 4 இலக்க எண்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என முடிவெடுத்தவர் 6 டிஜிட்டல் எண்ணுக்கு பதிலாக 4 டிஜிட்டல் எண்ணை தேர்வு செய்தார்.

  ஏடிஎம் பாஸ்வேர்டில் 6 இலக்க எண்ணை பயன்படுத்தினால் பாதுகாப்பு கூடுதலாக இருக்கும் என ஜான் கருதினார். ஏனென்றால் 4 இலக்க எண்களை பயன்படுத்தும் போது ஹேக்கர்கள் அதனை ஹேக் செய்யும் வாய்ப்பிற்கான அளவு 20 சதவீதமாக இருந்தது. அதாவது 0000 முதல் 9999 வரையிலான இந்த எண்களின் ஒட்டுமொத்த சேர்க்கை 10,000 முறைகள் என்பதால் 4 இலக்க ஏடிஎம் பின் பாதுகாப்பானவை அல்ல என கருதினார். ஆனால் அவை 6 இலக்க பின் உடன் ஒப்பிடுகையில் குறைவான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. எனவே தான் பல நாடுகளில் 6 இலக்க ஏடிஎம் பின் பயன்படுத்தப்படுகிறது.

  இருப்பினும் உள்ளீட்டிற்கும், எளிதில் நினைவில் கொள்வதற்கும் ஏற்றது என்பதால் தான் 4 இலக்க ஏடிஎம் கடவுச்சொற்களை சில நாடுகளில் உள்ள வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மேலும் வங்கி தொடர்பான மோசடிகள், ஆன்லை திருட்டு குறித்தும் அவ்வப்போது வாடிக்கையாளர்களை உஷார்படுத்தி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: ATM Card, Bank

  அடுத்த செய்தி