ஹோம் /நியூஸ் /வணிகம் /

பென்சன் பெறுபவர்கள் கவனத்திற்கு ..அக்டோபர் முதல் ரூல்ஸ் மாறிடுச்சு மறந்துடாதீங்க!

பென்சன் பெறுபவர்கள் கவனத்திற்கு ..அக்டோபர் முதல் ரூல்ஸ் மாறிடுச்சு மறந்துடாதீங்க!

அடல் பென்சன்

அடல் பென்சன்

Atal Pension Yojana : வரி தாக்கல் செய்யும் நபர்கள் 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனுமதி கிடையாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் வந்திருக்கும் முக்கிய மாற்றம் அக்டோபர் 1 முதல் வருமான வரி செலுத்தும் நபர் அடல் பென்ஷன் யோஜனா கணக்கைத் தொடங்கத் தகுதி பெறமாட்டார்கள்.

  முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரிலான அடல் பென்ஷன் யோஜன திட்டத்தில் சில மாற்றங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களின் சந்தா பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டி பிறகு அவருக்கு குறைந்தப்பட்சம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனுமதி கிடையாது. இது தொடர்பான அறிவிப்பு நிதி அமைச்சகத்தால் 2022 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

  ஏற்கெனவே கட்டிய வீட்டை வாங்கப் போறீங்களா? ஏமாறாமல் இருக்க இதையெல்லாம் செக் பண்ணுங்க!

  அக்டோபர் 1, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு சேரும்  சந்தாதாரர் வருமான வரி செலுத்தத் தகுதியானவர் என்று கண்டறியப்பட்டால் அல்லது விண்ணப்பிக்கும் தேதிக்கு முன், தெரிய வந்தால் APY கணக்கு மூடப்பட்டு, இன்றுவரை திரட்டப்பட்ட ஓய்வூதியச் செல்வம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். வரி செலுத்துவோர் எனக் கண்டறியப்பட்டு அவர் அடல் பென்ஷன் யோஜனாவில் கணக்கு வைத்திருந்தால் அந்தக் கணக்கு உடனடியாக மூடப்படும்.

  Mutual funds : கொரோனாவுக்கு பின் மாறிய நிலைமை.. முதலீட்டாளர்களை ஈர்த்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்!

  இது முழுக்க முழுக்க ஏழை எளிய மக்கள் ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆகவே குறைந்தப்பட்ட வருமான வரி செலுத்துவோர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதனால் உங்களுக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் இணைந்த பிறகு வருமான வரி செலுத்தினாலும் அந்தக் கணக்கு முடக்கப்பட்டு, பணம் திருப்பி செலுத்தப்படும்.-40 வயதுடைய நபர்கள் இணையலாம். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தபால் அல்லது வங்கி கிளைகள் மூலம் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Atal Pension Yojana Scheme, Pension Plan