Home /News /business /

மாதம் ரூ. 210 முதலீடு... ஆண்டுக்கு ரூ.60,000 பென்ஷன்... மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

மாதம் ரூ. 210 முதலீடு... ஆண்டுக்கு ரூ.60,000 பென்ஷன்... மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

அடல் பென்ஷன் யோஜனா

அடல் பென்ஷன் யோஜனா

மாதம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பென்ஷனாகப் பெறலாம். ஆனால் முதலீட்டுத் தொகை எவ்வளவு என்பது வயது என்ன என்பதைப் பொருத்து மாறும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு திட்டமே அடல் பென்ஷன் யோஜனா. இது ஒரு அடிப்படை பென்ஷன் திட்டம். எளிதாகச் சாமானியர்கள் யார் வேண்டுமானாலும் முதலீட்டைத் தொடங்கிப் பென்ஷன் பெற முடியும்.

மாதம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பென்ஷனாகப் பெறலாம். ஆனால் முதலீட்டுத் தொகை எவ்வளவு என்பது வயது என்ன என்பதைப் பொருத்து மாறும். ஓய்வுக்கான பங்களிப்பை மாதம் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு வாரியாகச் செலுத்தலாம்.

எனவே இங்கு மாதம் 210 ரூபாய் முதலீடு செய்து 60 வயதுக்குப் பிறகு மாதம் 5,000 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 60,000 ரூபாயாகப் பென்ஷன் பெறுவது எப்படி என இங்குப் பார்ப்போம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


அடல் பென்ஷன் யோஜான திட்டத்திற்கான விண்ணப்பம் அனைத்து வங்கிகளின் இணையதளங்களிலும் கிடைக்கும். வங்கி தளங்களில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அடையாள ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி


அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்குள் உள்ள அனைவரும் முதலீட்டைத் தொடங்கலாம். மேலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஆதார் எண் கட்டாயம். ஒருவேலை முதலீட்டைத் தொடங்கும் போது அதார் கார்டு இல்லை என்றாலும் பின்னர்ச் சில மாதத்திற்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

முதலீட்டு அட்டவணை


இந்த அட்டவணையில் எந்த வயது உடையவர்கள், தாங்கள் விரும்பும் பென்ஷனுக்கு எவ்வளவு மாத தவணை செலுத்த வேண்டும் என்று கீழே பார்ப்போம்.


அபராதம்


பென்ஷன் பங்களிப்பின் மாத தவணையைத் தாமதமாகச் செலுத்தினால் மாதம் 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

1.மாத தவணை 100 ரூபாய்க்குள் இருக்கும் போது 1 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
2. 101 முதல் 500 ரூபாய்க்குள்ளான மாத தவணையைத் தாமதமாகச் செலுத்தினால் 2 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
3. 501 ரூபாய் முதல் 1,000 ரூபாய்க்குள் தவணை இருக்கும் ஓது 5 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
4. 1001 ரூபாய்க்கும் அதிகமான தொகையைத் தவணையாகச் செலுத்த வேண்டுமெனில் மாதம் 10 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும்.

ஒருவேலை 6 மாதம் வரை தொடர்ந்து தவணையைச் செலுத்தவில்லை என்றால் கணக்கு உறைய நிலையில் வைக்கப்படும். இதுவே 12 மாதங்கள் எனில் கணக்கு செயல் இலக்கும். 24 மாதங்கள் எனில் கணக்கு மொத்தமாக மூடப்படும்.

பணத்தைத் திரும்பப் பெறுதல்


அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய கணக்குச் சந்தாதார்கள் 60 வயது வரை வெற்றிகரமாக முதலீட்டை நிறைவு செய்யும் போது 100 சதவீத தொகையும் மாதம் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு வாரியாகப் பென்ஷனாகப் பெறலாம்.

ஒருவேலை இறக்க நேர்ந்தால் பென்ஷனை அவரைச் சர்ந்து இருந்தவர்கள் பெறலாம். இருவரும் இறக்க நேர்ந்தால் வாரிசுதாரர்களுக்குக் கார்பஸ் தொகை சேரும். கார்பஸ் தொகை குறைந்தபட்சம் 1.7 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 8.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

60 வயது நிறைவடையும் முன்பு இடையில் வெளியேற முடியாது. ஆனால் குறிப்பிட்ட நோய்கள் தாக்கும் போது இடையில் வெளியேற அனுமதிக்கப்படும்.

மேலும் பார்க்க: 
Published by:Tamilarasu J
First published:

Tags: Atal Pension Yojana Scheme, Pension Plan, PMAPY

அடுத்த செய்தி