Home /News /business /

இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது.. விதிகளை மாற்றிய மத்திய அரசு!

இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது.. விதிகளை மாற்றிய மத்திய அரசு!

பென்சன்

பென்சன்

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலன்களைக் கருதியும், 60 வயதிற்குப் பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் உருவாகப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. தபால் நிலையம் அல்லது வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18- 40 வயதுடைய நபர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணையலாம் என அரசு தெரிவித்திருந்தது. முதலீட்டாளர்களின் பங்களிப்பைப் பொறுத்து 60 வயதை எட்டியதும் அவர்களுக்கு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை பென்ஷன் வழங்கக்கூடிய நடைமுறை உள்ளது. இதன் மூலம் நீங்கள் பெறப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தற்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி, வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. ஒரு வேளை அக்டோபர் 1 அல்லது அதற்குப்பிறகு நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா கணக்கைத் திறந்தால் என்ன பிரச்சனைகளை வருமான வரி செலுத்துவோர் சந்திக்கக்கூடும் என இங்கே தெரிந்துக் கொள்வோம்.

    அக்டோபர் 1 க்கு பிறகு அடல் பென்ஷன் யோஜனா கணக்கைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகள்:

    மத்திய நிதி அமைச்சக அறிவிப்பின் படி, அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்திருந்தால் அவர்களது கணக்கு முடக்கப்படும். இதோடு சந்தாரர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.

    புதிய திருத்தத்தின் படி வருமான வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய விஷயங்கள்:

    ஓய்வூதியம் ஒன்றைக் கருத்தில் வைத்து அரசு அறிவித்துள்ள திட்டத்தில் பலர் இணைவார்கள். ஆனால் தற்போதுள்ள அறிவிப்பின் படி, வருமான வரி செலுத்துவோரும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்திருக்க விரும்பினால் அவர்கள் அக்டோபர் 1, 2022 க்கு முன்னதாக திட்டத்தில் சேரலாம். இதையடுத்து நீங்கள் வருகின்ற செப்டம்பர் 30, 2022 வரை சந்தாதாரர்களாக இருக்கலாம். இதற்குப் பின்னர் வருமான வரி செலுத்தும் நபர்களின் அடல் பென்ஷன் யோஜனா கணக்கு செல்லாததாகிவிடும் என அறிவித்துள்ளது.

    கடன் வாங்கியவர்களை டார்ச்சர் செய்ய கூடாது..விதியை கடுமையாக்கிய ஆர்.பி.ஐ!

    இதோடு வருமான வரி செலுத்துவோர் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) போன்ற திட்டத்தில் சேரலாம். இதன்படி ஓய்வுக்குப் பிறகு நீங்கள் அதிக ஓய்வூதியத் தொகைகளைப் பெறலாம். இதோடு வரி செலுத்துவோர் அதிக உத்தரவாதம் மற்றும் வரி இல்லாத வருமானத்திற்காக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற திட்டங்களில் சேர்ந்து பயன் பெறமுடியும் என தெரிவித்துள்ளது.

    குறிப்பாக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி 4.01 கோடி சந்தாதார்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Atal Pension Yojana Scheme, Govt Scheme, Pension Plan

    அடுத்த செய்தி