ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.7 முதலீடு செய்தால் ரூ. 5000/- வரை பென்சன்.. இதோ முழு விபரம்!

ரூ.7 முதலீடு செய்தால் ரூ. 5000/- வரை பென்சன்.. இதோ முழு விபரம்!

Atal Pension Yojana (APY)

Atal Pension Yojana (APY)

வயதானக் காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல் இருக்கும் போது நமக்கென்று ஏதாவது ஒன்று சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • tamil, India

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குடும்பம், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் பல இதர செலவுகளுக்காக சம்பாதிக்கும் பணத்தை தங்களது இளமைக்காலத்தில் செலவழித்து விடுவார்கள். பெற்றோர்களின் கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு எதிர்கால பிரச்சனைகளை சற்றும் யோசிக்க மாட்டார்கள். குறிப்பாக வயதானக் காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல் இருக்கும் போது நமக்கென்று ஏதாவது ஒன்று சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்குக் கவலையில்லை என்றாலும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை என்பது கேள்விக்குறித் தான்.

இந்நிலையில் இதுப்போன்ற தொழிலாளர்களின் நிலையை மனதில் வைத்து மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஓய்வூதிய காலத்தில் நிலையான ஒரு தொகையை பென்ஷனாக வழங்கும் திட்டமாக உள்ளது. எப்படி முதலீடு செய்ய வேண்டும்? வயது வரம்பு? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்..

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்…

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் நபர்களுக்கு குறைந்த பட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும்.

உங்களது வயது சரியாக இருக்கும் பட்சத்தில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்க வேண்டும். இதை நீங்கள் தொடங்குவதற்கு முன்னதாக வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை அவசியம் இருக்க வேண்டும்.

இதோடு, இந்தத் திட்டத்தில் சேர நீங்கள் நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை.. ஆன்லைன் மூலமாக பென்ஷன் திட்டத்தில் நீங்கள் இணைந்துக் கொள்ளலாம். மற்ற பென்ஷன் திட்டங்களைப் போன்று நீங்கள் அதிகளவில் பணம் செலுத்த வேண்டியிருக்காது. தினமும் ரூ. 7 என்ற விகிதம் மாதம் ரூ. 210 செலுத்தினால் நீங்கள் பென்சனாக ரூபாய் 5 ஆயிரம் வரை பெற முடியும். நீங்கள் தரக்கூடிய மாதாந்திர பங்களிப்புகளைப் பொறுத்து, ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 1000, ரூ. 2ஆயிரம், ரூ. 3ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என 60 வயதில் பணத்தைப் பெற முடியும். இந்த திட்டத்திற்கு செலுத்தக்கூடிய மாதாந்திர முதலீட்டுப் பணம் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இருக்கிறது.

Also Read : மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை எப்போது பெற முடியும்! 

எனவே நீங்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி உங்களுடைய பணத்தை நீங்கள் டெபாசிட் செய்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தாதாரருக்கு மரணம் ஏற்பட்டால், அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒருவேளை இவர்கள் இருவருமே இறந்துவிடும் பட்சத்தில், அவர்களது நாமினிக்கு முழு ஓய்வூதிய கார்பஸ் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.

First published:

Tags: Investment, Pension Plan