• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Atal pension yojana : வயசான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும் இந்த திட்டம் கைவிடாது!

Atal pension yojana : வயசான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும் இந்த திட்டம் கைவிடாது!

அடல் பென்ஷன் யோஜனா

அடல் பென்ஷன் யோஜனா

atal pension: மாதத்திற்கு வெறும் 210 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்

  • Share this:
    அடல் பென்ஷன் யோஜனா என்னும் ஓய்வூதிய திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி பயன்பெறலாம் என்ற முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

    18 முதல் 40 வயதுடைய எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் எளிதாக இதில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில், வைப்புதாரர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குகின்றனர். இது ஒரு அரசாங்கம் திட்டம் என்பதால் எந்த பயமும் வேண்டாம். உங்கள் வயதை பொறுத்தே இதில் முதலீடு செய்வது தீர்மானிக்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1,000, 2000, 3000, 4000 மற்றும் அதிகபட்சம் 5,000 ரூபாய் என்ற அளவில் மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.இந்த திட்டத்தில் இணய சேமிப்புக் கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும்.ஒரு நபர் 18 வயதில் அடல் ஓய்வூதிய யோஜனாவில் சேர்ந்தால், 60 வயதிற்குப் பிறகு, அவர் ஒவ்வொரு மாதமும் ரூ .5000 என்ற ஓய்வூதியத்தை பெற, மாதத்திற்கு வெறும் 210 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விண்ணப்ப முறைகள் உள்ளன

    வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டியது அவசியம். கணவனும் மனைவியும் 30 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்களாக இருந்தால், அவர்கள் மாதம் ரூ. 577 பங்களிக்கலாம். மாதாந்திர ஓய்வூதியத்துடன், வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறந்தால், எஞ்சியிருக்கும் பங்குதாரர் ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதற்கும் ஆன ஓய்வூதியத்துடன் முதிர்வு தொகையை பெறுவார்கள். அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்தால் வருமான வரி சட்டம் 80 சி -யின்  வரிச் சலுகையும் கிடைக்கும். .

    எல்லா தரப்பினருக்கும் பென்சன்  கிடைக்க வேண்டுமென்பதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென்பதே அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் நோக்கம் ஆனால் தற்போது அனைவரும் இதில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே வயசான பிறகும் உங்களின் தேவையை கண்டிப்பாக இந்த திட்டம் தீர்த்து வைக்கும் என்பது உறுதி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: