• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • GST Record Collection | வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல்: மார்ச்சில் 1.23 ட்ரில்லியன் ரூபாய்கள்- அறிமுகமானதிலிருந்து அதிகம்

GST Record Collection | வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல்: மார்ச்சில் 1.23 ட்ரில்லியன் ரூபாய்கள்- அறிமுகமானதிலிருந்து அதிகம்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மார்ச் 2021-ல் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.23 ட்ரில்லியன்கள் என்று சாதனை படைத்துள்ளது, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுதான் சாதனை வசூல் ஆகும்.

  • Share this:
    மார்ச் 2021-ல் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.23 ட்ரில்லியன்கள் என்று சாதனை படைத்துள்ளது, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுதான் சாதனை வசூல் ஆகும்.

    மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூலை விட இது 27% அதிகரித்துள்ளது. இதனை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இறக்குமதியின் மூலம் வசூலான வரி 70% அதிகமாகும். உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் இறக்குமதி உட்பட கடந்த ஆண்டு இதே மாத வசூலை விட 17% அதிகம்.

    இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 2021-ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி அல்லது சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1,23,902 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி வசூல் , ரூ. 22, 973கோடி, மாநில ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.29,329 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.62, 842 கோடி, (இதில் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 31,097 கோடி ரூபாயும் அடங்கும்), மற்றும் செஸ் ரூ. 8,757 கோடியாகும். இதிலும் ரூ.935 கோடி இறக்கு மதி வரி மீதான செஸ் தொகை வசூலாகும்.

    2019-20-ம் நிதியாண்டில் 12 மாதங்களில் 9 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

    ஏப்ரலில் ரூ.32,172 கோடி, மே மாதத்தில் ரூ.62,151 கோடி, ரூ90,917 கோடி ஜூனில், ரூ.87,422 கோடி ஜூலையில், ரூ.86,449 கோடி ஆகஸ்ட்டில் கடந்த ஆண்டு வசூலாகியுள்ளது. செப்டம்பரில் ரூ.94,480 கோடி, அக்டோபரில் ரூ.1,05,155 கோடி, நவம்பரில் ரூ. 1,04,963 கோடி, டிசம்பரில் ரூ.1,15,174 கோடி. 2021 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 1,19,847 கோடி, பிப்ரவரி 1,13, 143 கோடி.

    கடந்த 6 மாதங்களாக 1 லட்சம் கோடியை சீராக கடந்துள்ள ஜிஎஸ்டி வரி வசூல் கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆனாலும் இறக்குமதி ஜிஎஸ்டி அதிகம் இருப்பது பிரதமரின் ஆத்ம நிர்பர், அல்லது தற்சார்பு பொருளாதாரத்துக்கானதா என்பது ஒத்துப் போவதுதான் என்பது தெரியவில்லை.

    ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், உள்நாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வருவாய் மூலம் ஜிஎஸ்டி அதிகரிக்க வேண்டும் இதன் மூலம்தான் வேலை வாய்ப்பு அதிகரிப்பு குறியீடு, சமூக நலக் குறியீடுகள் அதிகரிக்க வேண்டும், மக்களின் செலவழிக்கும் சேமிப்புத் திறன் அதிகரித்தால்தான் இதனை பொருளாதார வளர்ச்சி என்று கூற முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    வருவாய் நன்றாக இருக்கும் போது சிறுசேமிப்பு மீதான வட்டியை ஏன் குறைக்க வேண்டும் என்ற கேள்வி எழ இன்று காலை திடீரென பல்டி அடித்து சிறுசேமிப்பு மீதான பழைய வட்டிவிகிதமே தொடரும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: