அமேசான், ஃபிளிப்கார்ட் மீது உடனடியாக விசாரணையை தொடங்குங்கள்: அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

அமேசான், ஃபிளிப்கார்ட்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீதான விசாரணையை தொடங்க அறிவுறுத்துமாறும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

  • Share this:
அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மறுபரீசிலனை செய்வதுடன், ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மீது தாமதமின்றி உடனடியாக விசாரணையை தொடங்க இந்திய போட்டி ஆணையத்திற்கு (CCI) மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) வலியுறுத்தியுள்ளது.

நிறுவனங்களுக்கிடையிலான போட்டிச் சட்டங்களின் விதிமுறைகளை மீறியதாக இ-காமர்ஸ் வணிகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் மீது இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு கோரிய அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் ரிட் மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தள்ளுபடி செய்தது.

மேலும், தகுந்த காரணங்களுக்காக உரிய முறையிலான விசாரணைக்கு இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான இந்த மனுக்களை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Also Read:   அமேசான் வரி மோசடி சர்ச்சை: இஃன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கிற்கு என்ன தொடர்பு?

இந்நிலையில் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீதான விசாரணையை தொடங்க அறிவுறுத்துமாறும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த கடிதத்தில் இ-காமர்ஸ் வணிகத்துக்கான வழிகாட்டு விதிகளை உள்ளடக்கிய Press Note 2-க்கு பதிலாக புதிய Press Note -ஐ வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் விருப்பமான விற்பனையாளர்களுடன் தங்கள் தளங்களில் கூட்டணி வைத்துக்கொண்டு நியாயமான வர்த்தக ஒழுங்குமுறையில் ஈடுபட்டிருப்பதாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மீது எழுந்த புகார் குறித்து விசாரிக்க இந்திய போட்டி ஆணையம் கடந்த ஜனவரி 13ம் தேதியன்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: