பணியாளர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து ஆச்சரியப்பட வைத்த ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம்

கொரோனாவால் ஏற்பட்ட சானிடைசர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சானிடைசர் தயாரிப்பில் ஈடுபட்டது.

பணியாளர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து ஆச்சரியப்பட வைத்த ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம்
ஏசியன் பெயிண்ட்ஸ்
  • Share this:
கொரோனாவால் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்துள்ள நிலையில், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கும் விதமாக ஊதியத்தை அதிகரித்துள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய பெயின்ட் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட சானிடைசர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சானிடைசர் தயாரிப்பில் ஈடுபட்டது.

மேலும், சுமார் 35 கோடி மதிப்பில் கொரோனா நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளது ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம். பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவால் சந்தித்த பொருளாதார இழப்பால், ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் நிலையில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கு ஊதியத்தை அதிகரித்துள்ளது.


“பங்குதாரர்களின் நலன்களை கருதும் உண்மையான தலைமை மற்றும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இருக்க நினைக்கிறோம். ஒவ்வொரு ஊழியரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது” என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அமித் சைங்கிள் ’எகனாமிக் டைம்ஸ்’ இதழிடம் கூறியுள்ளார்.


First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading