இலங்கையை அடுத்து சீனாவின் ஒரு சில துறைகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. முக்கியமாக நிலம், சொத்தின் மதிப்புகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
ஆசிய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடும், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஆசியாவின் பணக்காரப் பெண், யாங் ஹுயானின் சொத்துமதிப்பு, இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட $24 பில்லியனில் இருந்து $11 பில்லியனாகக் குறைந்துள்ளது. இதற்கு சீனாவின் சொத்து நெருக்கடி அதிகரிப்பு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
41 வயதான யாங், சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸை நிறுவி அதன் மூலம் நிலவிற்பனை செய்து வருகிறார். 1992 இல் குவாங்டாங் மாகாணத்தின் ஃபோஷானில் நிறுவனத்தை நிறுவிய அவரது தந்தை யாங் குவோகியாங்கிடமிருந்து பெரும் பங்குகளை பெற்று ஹுயான் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நாட்டின் ரியல் எஸ்டேட் துறையானது வீட்டு விலை வீழ்ச்சி, வாங்குபவர்களின் தேவை, வாங்கும் திறன் குறைவு மற்றும் கடந்த ஆண்டு முதல் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களைச் சூழ்ந்துள்ள கடன் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. யாங் அவர்களின் கண்ட்ரி கார்டன் நிறுவனத்தின் பங்கு இந்த ஆண்டு அதன் மதிப்பில் பாதிக்கும் மேல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் - பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா?
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, யாங் அவர்களின் சொத்தின் சந்தை மதிப்பு குறைந்தாலும் , இன்னும் ஆசியாவின் பணக்காரப் பெண்மணியாகவே அவர் தொடர்கிறார். இருப்பினும், அவரது நிகர மதிப்பில் ஏற்பட்ட சரிவு, அவருக்கும் சீனாவில் உள்ள சக பெண் கோடீஸ்வரர்களுக்கும் இடையே உள்ள செல்வ இடைவெளியைக் குறைத்துள்ளது. இரண்டாம் பெண் பணக்காரரான ஃபேன் ஹாங்வேக்கும் இவருக்கும் 100 மில்லியன் டாலர்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கெமிக்கல் ஃபைபர் தயாரிப்பாளரான ஹெங்லி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு ஆசியாவின் இரண்டாம் பெண் பணக்கார பெண் ஹாங்வே தலைமை தாங்குகிறார்.
ரியல் எஸ்டேட் நெருக்கடி எப்படி அதிகரித்தது?
கடந்த ஆண்டு டிசம்பரில், பணப்புழக்க சிக்கல்களைத் தொடர்ந்து, சீனாவின் சொத்து நிறுவனங்கள் அதன் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் உள்நாட்டு பணப்புழக்கம் மட்டுமின்றி வெளிநாட்டு கடனும் அதிகமாகியுள்ளன. வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையும், ரியல் எஸ்டேட் நெருக்கடியை அதிகரித்து வந்ததோடு மட்டுமில்லாமல் , கட்டுமானம் சரியான நேரத்தில் முடிக்கப்படாவிட்டால், அதற்கான பணமும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த முடியாது என்று மக்கள் சொல்ல ஆரம்பித்தனர். இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மேலும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
Necrobotics: ரோபோவாக மாறும் சிலந்தி பற்றி தெரியுமா உங்களுக்கு?
நில விற்பனையாளர்கள் தங்கள் நிதி நெருக்கடியை சீர்படுத்த, HK$2.83 பில்லியன் ($361 மில்லியன்) வரையிலான பணத்தேவையை பூர்த்தி செய்ய, நிலம் அல்லது சொத்துக்களுக்கு தங்களது இறுதி சந்தை விலையை விட கிட்டத்தட்ட 13 சதவீத தள்ளுபடியில் பங்குகளை விற்பனை செய்வதாகத் தெரிகிறது. கிடைக்கும் வருமானத்தை நிறுவனத்தின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. .
நிறுவங்களுக்கான தரவரிசைப்பட்டியல் S&P குளோபல் ரேட்டிங்ஸ்படி, இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையில், வேலைநிறுத்தங்களால் சீனாவின் சொத்து விற்பனை இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்காகக் குறையக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. அதோடு டெவலப்பர்கள் முன்கூட்டியே விற்கப்பட்ட யூனிட்களை சரியான நேரத்தில் முடிக்க முடியாது . இதனால் சந்தை மீதான மக்களின் நம்பிக்கையும் குறையும் என்கின்றனர். சீனா இதிலிருந்து மீள பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.