பட்ஜெட் 2019: அல்வா கிண்டுவதை மிஸ் செய்தார் அருண் ஜெட்லி! (வீடியோ)

அல்வா கிண்டும் விழா பாராளுமன்றத்தில் முடிவடைந்த பிறகு தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுவது தொடங்கும்.

பட்ஜெட் 2019: அல்வா கிண்டுவதை மிஸ் செய்தார் அருண் ஜெட்லி! (வீடியோ)
அல்வா கிண்டும் விழாவில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
  • News18
  • Last Updated: January 24, 2019, 7:56 PM IST
  • Share this:
பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் 2019 தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கத் தொடங்கும் முன்பு பாரம்பரியமாகச் செய்து வரும் ‘அல்வா விழா’ திங்கட்கிழமை நடைபெற்றது.

அல்வா கிண்டும் விழா பாராளுமன்றத்தில் முடிவடைந்த பிறகு தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படும் பணிகள் தொடங்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிதி அமைச்சரான அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் அல்வா விழாவில் பங்கேற்க முடியவில்லை.


பட்ஜெட் அறிக்கையை உருவாக்கியவர்கள், அச்சிடும் பணியில் ஈடுபட உள்ளவர்கள், இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்து முடியும் வரை அவர்களது வீட்டில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. மேலும், அவர்கள் தங்களது வீட்டிற்கும் செல்ல முடியாது.அல்வா கிண்டும் விழாவில் அருண் ஜெட்லி பங்கேறக்கவில்லை என்றாலும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

மேலும் பார்க்க: விழா மேடையிலேயே நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த அதிமுக அமைச்சர்.

First published: January 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading