ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணமதிப்பிழப்பு காரணமாக வருமான வரிதாக்கல் குறைந்தது!

பணமதிப்பிழப்பு காரணமாக வருமான வரிதாக்கல் குறைந்தது!

வருமான வரி

வருமான வரி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியில் சரிவை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்ததாக பொருளாதார நிபுனர்கள் கூறியுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட, 2016-17 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை, 88 லட்சம் பேர் தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2016-17 நிதியாண்டில் பண மதிப்பிழப்புக்கு பிறகு 1. 06 கோடி பேர் புதிதாக வருமான வரித் தாக்கல் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து வந்த 88 லட்சம் பேர், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிதியாண்டில் மட்டும் வருமான வரித்துறை தாக்கல் செய்யாமல் பாதியிலேயே விட்டோரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வருமான வரி தாக்கல் செய்து வந்தவர்களில் 88 லட்சம் பேர், பணமதிப்பிழப்பு நடந்த ஆண்டில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட கடந்த 20ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.

முன்னதாக இந்த எண்ணிக்கை 2012-13 நிதியாண்டில் 37 லட்சமாகவும், 2013-14-ல் 27 லட்சமாகவும் குறைந்திருந்தது.

இவ்வளவு அதிகம் பேர் திடீரென வருமான வரி செலுத்தாமல் விட்டதற்கு பிரதான காரணமாக, 500 ஆயிரம் ரூபாய் நேட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், பலருக்கு திடீர் வேலையிழப்பு ஏற்பட்டதும், வருமானத்தில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டதுமே காரணமாக கூறப்படுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியில் சரிவை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்ததாக பொருளாதார நிபுனர்கள் கூறியுள்ளனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Demonetisation, Income tax