ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவில் 69 சதவீத குடும்பத்தினர்கள் நிதி பாதுகாப்பு இன்றி உள்ளனர் - ஆய்வில் தகவல்!

இந்தியாவில் 69 சதவீத குடும்பத்தினர்கள் நிதி பாதுகாப்பு இன்றி உள்ளனர் - ஆய்வில் தகவல்!

இந்தியாவில் 69 சதவீத குடும்பத்தினர்கள் நிதி பாதுகாப்பு இன்றி உள்ளனர்

இந்தியாவில் 69 சதவீத குடும்பத்தினர்கள் நிதி பாதுகாப்பு இன்றி உள்ளனர்

இந்தியாவில் 3 சதவீத குடும்பங்கள் மட்டுமே சொகுசான வாழ்க்கை தரத்தை அனுபவிக்கின்றனர்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர்களின் வருமானம், சேமிப்பு மற்றும் வீட்டுச் செலவுகள் போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு தனிநபரின் நிதிச்சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், 69 சதவீத இந்தியர்கள் நிதிப்பாதுகாப்பு இன்றி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய குடிமக்களின் தரத்தை கணக்கீடு செய்யும் Money9 என்ற நிதிப் பாதுகாப்பு குறித்த குறியீடுகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 4.2 நபர்களை கொண்ட ஒரு இந்திய குடும்பத்தின் சராசரி வருமாமம் மாதம் ஒன்றுக்கு ரூ.23,000 ஆக உள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சுமார் 46 சதவீத இந்திய குடும்பங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான வருமானத்தை பெறுகின்றன. இந்தியாவில் 3 சதவீத குடும்பங்கள் மட்டுமே சொகுசான வாழ்க்கை தரத்தை அனுபவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அதிக வருமானம் உடையவர்கள் என்று Money9 தெரிவிக்கிறது.

முதலீடுகள் குறித்த ஆய்வு

சுமார் 70 சதவீத இந்தியர்கள் வங்கி மற்றும் அஞ்சல் நிலைய டெபாசிட், தங்கம், காப்பீடு என்று ஏதோ ஒரு வகையில் பணத்தை சேமிக்கின்றனர் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. இந்திய குடும்பங்களில் 22 சதவீதம் பேர் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், யூலிப் போன்ற நிதி சார்ந்த விஷயங்களிலும், வீடு, இடம் போன்ற அசையா சொத்துகளை வாங்குவதற்காகவும் முதலீடு செய்கின்றனர். இந்தியர்களில் சுமார் 11 சதவீத குடும்பத்தினர் மட்டுமே வங்கிகளில் கடன் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.

இவர்களில் மிக அதிகபட்சமாக 18 சதவீத மக்கள் வீடு மற்றும் சொத்து வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். 6 சதவீத மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பங்கு சந்தையிலும் 3 சதவீத மக்களும், யூலிப் பாலிசியில் 3 சதவீத மக்களும் முதலீடு செய்கின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Also Read : பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்திய அரசு வங்கி..விட்ராதீங்க!

தனிநபர் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை தான் இருப்பதிலேயே மிக அதிகமாக இருக்கிறது. வீட்டுக் கடன்கள் மற்றும் இதர கடன்கள் இதற்கு அடுத்தப்படியாக வருகின்றன. இந்தியாவில் 42 சதவீதம் பேர் நிதிப் பாதுகாப்பு இன்றி உள்ளனர் என்றும், மேலும் குறைந்த வருமானம் கொண்டவர்களையும் சேர்க்கும்போது இந்த சதவீதம் 69 ஆக அதிகரிக்கிறது என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நாடு முழுவதிலும் மொத்தம் 20 மாநிலங்களைச் சேர்ந்த 100 மாவட்டங்களில், 1000 நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளை தேர்வு செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 31,510 வீடுகளின் நிதிச்சூழலை ஆராய்ந்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

Published by:Vijay R
First published:

Tags: Credit Card