முகப்பு /செய்தி /வணிகம் / இனி சென்னைக்கு ஹைதராபாத்தில் இருந்தே பிரியாணியை வரவழைக்கலாம்... zomatoவின் செம்ம பிளான்..!

இனி சென்னைக்கு ஹைதராபாத்தில் இருந்தே பிரியாணியை வரவழைக்கலாம்... zomatoவின் செம்ம பிளான்..!

சோமேட்டோ

சோமேட்டோ

Zomato : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் உணவுத் தளத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நகரத்தின் தனித்துவமான உணவை அந்த ஊரின் ஒரு சிறந்த கடையில் இருந்து ஆர்டர் செய்து, 'இன்டர்சிட்டி லெஜண்ட்ஸ்' மூலம் தங்கள் வீடுகளில் டெலிவரி பெறலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu

இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் அதன் புவியியல் அமைப்புக்கு ஏற்ப உணவு பழக்கங்களும் மாறும். இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது… என்று ஒரு சில வெறித்தனமான ஃபுட்டிக்கள் பையை தூக்கிகொண்டு ஊர் ஊராக சென்று அதன் சிறப்பான உணவுகளை ரசிக்கத் தொடங்கி விடுவர்..

கடமைகள் நிறைய இருக்கு… வேலையை விட்டு சாப்பிடுவதற்காக பல மைல் தூரம் போக முடியாது என்று நினைப்பவர்களுக்கு இப்போது Zomato நிறுவனம் உதவி கரம் நீட்ட தயாராக உள்ளது.

நீங்கள் சென்னையில் இருந்து ராஜஸ்தான் தாளியையோ, கொல்கத்தா ரசகுல்லாவையோ, ஹைதராபாத் பிரியாணியையோ எண்ணி கனவு கொண்டு இருக்கிறீர்களா? இனி அதுவும் உங்கள் கையில் கிடைக்க வைக்கிறோம் என்கின்றனர் Zomato நிறுவனத்தினர்.

Zomato ஒரு முன்னோட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இதன் கீழ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் உணவுத் தளத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நகரத்தின் தனித்துவமான உணவை அந்த ஊரின் ஒரு சிறந்த கடையில் இருந்து ஆர்டர் செய்து, தங்கள் வீடுகளில் டெலிவரி பெறலாம். இந்த திட்டத்தின் பெயர் 'இன்டர்சிட்டி லெஜண்ட்ஸ்' என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

“இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சிறப்பான உணவு இருக்கிறது. Zomato இன் இன்டர்சிட்டி லெஜண்ட்ஸ் (இப்போது வரையறுக்கப்பட்ட இடங்களில் பைலட்ப்ராஜக்ட் ஆகி உள்ளது ) எங்கள் பயன்பாட்டின் மூலம் இந்தியாவின் நகரங்களில் தனித்துவமான உணவுகளை ஆர்டர் செய்ய உங்களை அனுமதிக்கிறது, ”என்று Zomato இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கோயல் ஒரு வலைப்பதிவு இடுகையில் இத்திட்டம் குறித்து மேலும் விளக்கினார் . இந்த திட்டத்தின் சில அம்சங்கள் இங்கே:

நீங்கள் 'ரசகுல்லா' (கொல்கத்தா), 'பிரியாணி' (ஹைதராபாத்), 'மைசூர் பாக்' (பெங்களூரு), 'கபாப்ஸ்' (லக்னோ), 'பட்டர் சிக்கன்' (டெல்லி), கச்சோரி' (ஜெய்ப்பூர்) போன்ற உணவுகளை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

உணவு புதிதாக  தயாரிக்கப்பட்டு , விமானப் போக்குவரத்தின் போது அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் சேதமடையாத கொள்கலன்களில் வைக்கப்படும். நறுமணம், அமைப்பு மற்றும் சுவை உயர் தரத்தில் இருப்பதை உறுதி செய்ய, உணவு விநியோகத்திற்கு முன் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்படும்.

Jio Mart- WhatsApp: வாட்ஸ்அப் சாட்டில் ஜியோ மார்ட் ஷாப்பிங் செய்வது எப்படி?

பயணத்தின் போது அதைப் பாதுகாக்க, அதிநவீன மொபைல் குளிர்பதன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஆர்டரைப் பெற்ற பிறகு, உணவை மைக்ரோவேவில் வைக்கலாம் அடுப்பில் வைத்து சூடு செய்து சாப்பிடலாம்

top videos

    இப்போதைக்கு, குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. Zomato அடுத்த சில வாரங்களில் மற்ற நகரங்களுக்கு விரைவாக அதை செயல்படுத்த உள்ளது.

    First published:

    Tags: Food Delivery App, Zomato