• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வாடகை வீட்டில் இருக்கும் போது ‘ஹோம் இன்சூரன்ஸ்’ செய்யமுடியுமா?

வாடகை வீட்டில் இருக்கும் போது ‘ஹோம் இன்சூரன்ஸ்’ செய்யமுடியுமா?

வீடு

வீடு

இது நம் சொந்த வீடு இல்லையே? இதற்கு நாம் இன்சூரன்ஸ் பெறுவது எப்படி? எதற்கு பிறர் வீட்டில் வசிக்கும் நாம் இன்சூரன்ஸ் வாங்க வெண்டும்?

  • News18
  • Last Updated :
  • Share this:
    சொந்த ஊரை விட்டு வெளியேறி பொருள் ஈட்ட வேண்டும் என்பதற்காக நகரங்களில் வாடகை வீட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது.

    வாடகை வீட்டில் வசிக்கும் போது, வீட்டில் உள்ள பொருட்களை வெள்ளம், புயல், கொள்ளை அல்லது பிற காரணங்களுக்காக இழக்கவும் வாய்ப்புண்டு.

    வீட்டை இன்சூரஸ் செய்யலாம் என்பதை அனைவரும் கேள்விபட்டு இருப்போம். வாடகை வீட்டில் வசிப்பவர்கள், இது நம் சொந்த வீடு இல்லையே? இதற்கு நாம் இன்சூரன்ஸ் செய்வது  எப்படி? எதற்கு பிறர் வீட்டில் வசிக்கும் நாம் இன்சூரன்ஸ் செய்ய வெண்டும்? என்ற கேள்விகள் இருக்கும்.

    சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் வீட்டை இன்சூரன்ஸ் செய்யலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றார்கள். வீட்டின் உரிமையாளர் தான் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், வாடகைக்கு இருப்பவர்கள் செய்ய முடியாது என்றில்லை.

    வாடகை வீட்டிற்கு இன்சூரன்ஸ் வாங்கிய பிறகு வெளியூர், சொந்த ஊர் என எங்கு சென்றாலும் வீட்டை பற்றி கவலையில்லாமல் இருக்கலாம்.

    மேலும்ம் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் போது, அவற்றுக்கும் தனியாக இன்சூரன்ஸ் செய்ய முடியும். வீட்டில் இல்லாத போது அல்லது வெளியூர் சென்றிருக்கும் போது என்று எப்போது அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அதனால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க ஹோம் இன்சூரன்ஸ் திட்டங்கள் உதவும்.

    ஹோம் இன்சூரன்ஸ் பெறும் முன்பு அந்தத் திட்டம் குறித்து விளக்கமாக படிக்க வேண்டும். வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்கள், அது நீங்கள் வாங்கும் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு கீழ் வருகிறதா அல்லது நில நடுக்கம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்கள், அது அந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் கீழ் வருகிறதா என்பதை பார்த்து திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

    மேளும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: