Home /News /business /

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப்போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க..

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப்போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க..

காட்சி படம்

காட்சி படம்

Health Insurance : ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவதற்கு முன்பாக ஏற்கனவே உங்களுக்கு உள்ள நோய்களை தெளிவுப்படுத்துங்கள்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மருத்துவ செலவினங்கள் குறித்த எச்சரிக்கையை கொடுத்துள்ளது. எனவே 2020ம் ஆண்டுக்கு பிறகு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தனக்காகவும், தான் நேசிப்பவர்களுக்கும் மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் உடல்நலக் காப்பீட்டு என்பது அதனை எடுக்க உள்ள நபரின் வாழ்க்கை முறை, குடும்ப வருமானம், வாழ்நிலை, சம்பந்தப்பட்டவருக்கு இருக்கும் நோய் (ஏதேனும் இருந்தால்), பரம்பரை நோய் குறித்த வரலாறு ஆகியவற்றை பொருத்து அமைகிறது.

தற்போதுள்ள அல்லது சாத்தியமான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்களுக்குப் பொருத்தமானதா என்பதை பகுப்பாய்வு செய்து கொள்ள தேவையான சில முக்கிய குறிப்புகள் இதோ..

1. போதுமான காப்பீட்டுத் தொகை:

மருத்துவ பணவீக்கத்தின் விரைவான வளர்ச்சி, சுகாதாரத்துறைக்கான செலவினங்களை அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி நோயாளிகளுக்காக சிகிச்சை செலவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் வசிக்கும் நகரத்தில் உள்ள மருத்துவச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை முடிவு செய்ய வேண்டும். கூடுதல் செலவு, திடீர் மருத்துவ பணவீக்கத்தின் போது சிகிச்சை செலவு அதிகரிப்பது, கூடுதல் போனஸ் போன்றவை உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.2. வாழ்நிலை அடிப்படையிலான தேவைகள்:

மகப்பேறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், வழக்கமான உடல்நலப் பரிசோதனை, வெளிநோயாளிகளுக்கான காப்பீடு, ஃபேமிலி ஃப்ளோட்டர் அடிப்படையிலான பாதுகாப்பு, தீவிர நோய்க்கான பாதுகாப்பு போன்ற ஒருவரின் வாழ்க்கை நிலையைப் பொறுத்து, ஒருவர் தனது தேவைக்கு ஏற்ற பலன்களை கொடுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை தேர்வு செய்யலாம் என தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3. நோய்கள்:

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவதற்கு முன்பாக ஏற்கனவே உங்களுக்கு உள்ள நோய்களை தெளிவுப்படுத்துங்கள். அதற்கு பொருந்தக்கூடிய காத்திருப்பு காலம், துணை வரம்புகள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றை பற்றி நன்றாக ஆராய்வது அவசியம்.

also read : 50 வயதுக்கு மேற்பட்ட தனி நபருக்கான ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி அறிமுகம்!

 4. பணமில்லா சேவை:

நீங்கள் வாங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ‘கேஸ் லெஸ்’ எனப்படும் பணமில்லா சேவைக்கான கவரேஜ் உள்ளதா? மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் இந்த வசதி கிடைக்குமா? என்ற விழிப்புணர்வுடன் இருங்கள்.5. உரிமைகோரல் தீர்வு தொகை விகிதம்:

க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ ஒரு பாலிசிதாரரால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். ஒரு காப்பீட்டு வழங்குநர் மொத்த உரிமைகோரல்களில் ஒரு வருடத்தில் செட்டில் செய்யும் க்ளைம்களின் சதவீதமாகும். அதிக விகிதம் தரும் காப்பீட்டு நிறுவனங்கள் நம்பமானவை என்பதால், அதனை தேர்வு செய்வதற்கு முன்பு நன்கு ஆய்வு செய்து முடிவெடுங்கள்.

also read : வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஹோம் லோன் வாங்கலாமா?

6. விலக்குகள் மற்றும் வரம்புகள்:

பாலிசியை வாங்கும் போது நோய்கள் அல்லது சிகிச்சைகளுக்கான விலக்கு அல்லது துணை வரம்பு, இணை-பணம் போன்றவற்றைப் புரிந்து கொள்ளவது அவசியம். இல்லையெல் தொடர்புடைய தேவைகள் அல்லது காப்பீட்டுத் தொகைக்கு காப்பீடு செய்யப்படாமல் இருப்பது காப்பீட்டாளரின் நிதி நிலைக்கு ஆபத்தாக மாறலாம். பாலிசியின் பலன்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் நீங்கள் வாங்கத் திட்டமிட்டுள்ள உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையைப் புரிந்துகொள்வது மற்றும் கண்காணிப்பது எப்போதும் கட்டாயம் ஆகும்.

7. எதிர்கால சிகிச்சை செலவு:

காப்பீட்டுத் தேவைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பது முக்கியம். மிகப்பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் வைத்திருப்பது அனைத்திற்குமான தீர்வு அல்ல, வயது, பணவீக்கம், மருந்துகளின் விலை உயர்வு போன்றவை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் அல்லது இரட்டிப்பாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.also read : கிராமப்புற மக்களில் வெகுசிலர் மட்டுமே யூபிஐ பேமெண்ட் வசதியை பயன்படுத்துகின்றனர் - ஆய்வில் தகவல்!

8. குளோபல் காப்பீட்டு கவரேஜ்:

இந்தியாவிற்குள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவராகும் படியான ஹெல்த் இன்சூரனஸ் பாலிசிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்தியாவிற்குள் எடுக்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸுக்கு மட்டுமே பாதுகாப்பு வரம்புகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி ஒருவர் அறிந்திருக்க வேண்டும், வெளிநாடு என்று வரும் போது காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள நாட்டில் உங்கள் சிகிச்சைக்கான செலவை கேஸ் லெஸ் அல்லது க்ளைம் எதன் மூலமாக செட்டில் செய்ய வேண்டும் என்பதை தான் முதலில் பார்க்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

9. செலவு:

கடைசியாக இருந்தாலும், இது இன்சூரன்ஸ் பாலிசிக்களை பொறுத்தவரை கட்டாயமானது. இன்சூரன்ஸ் பாலிசிகளின் நன்மைகளை மட்டுமல்ல மறக்காமல் அதற்கான ப்ரீமியத்தை செலுத்த எவ்வளவு செலவாகும் என்பதையும் பார்க்க வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Life Insurance

அடுத்த செய்தி