ஒருவழியாக கொரோனா தொற்று பெருமளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு, வழக்கமான சர்வதேச விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிசினஸ் சார்ந்த சுற்றுலா அல்லது குடும்பத்துடன் சுற்றுலா போன்ற பயணங்களை மக்கள் மீண்டும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.
வெளிநாடுகளில், அந்நாட்டு கரன்ஸியில் பரிவர்த்தனை செய்வதற்காக உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் ஸ்வைப் செய்யும்போது வங்கிகள், ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மார்க் அப் கட்டணத்தை பிடித்தம் செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டணம் என்பது உங்கள் பரிவர்த்தனை தொகையில் அதிகபட்சம் 3.5 சதவீதமாக இருக்கலாம்.
அதே சமயம், எக்ஸ்சேஞ்ச் மார்க் அப் கட்டணத்தை சற்று குறைவாக வசூலிக்கும் வங்கிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டுகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹெச்டிஎஃப்சி ரெகாலியா கிரெடிட் கார்டு :
அனைத்து விதமான ரீடெய்ல் செலவுகளின் போதும், உங்கள் பரிவர்த்தனையில் ரூ.150 க்கு தலா 4 ரிவார்ட் பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. இன்சூரன்ஸ், சேவைகள், கல்வி மற்றும் வாடகை போன்ற செலவுகளை செய்யும்போது ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டில் 2 சதவீத அளவுக்கு எக்ஸ்சேஞ்ச் மார்க் அப் கட்டணம் பிடிக்கப்படுகிறது. இந்த கார்டுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.2,500 ஆகும்.
also read :கிரெடிட் கார்டு பில் அதிகமாக வருகிறதா? இனி இந்த தப்பை செய்யாதீர்கள்!
எஸ்பிஐ கார்டு எலைட்:
ரெஸ்ட்ராண்டுகளில் சாப்பிடுவது, டிபார்மெண்டல் ஸ்டோர்களில் பொருட்களை வாங்குவது, மளிகை பொருட்களை வாங்குவது போன்ற அனைத்து செலவுகளிலும் தலா ரூ.100 தொகைக்கு 5 எக்ஸ் ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. இதில், எக்ஸ்சேஞ்ச் மார்க் அப் கட்டணம் 1.99 சதவீதம் ஆகும். இதன் ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூ.4,999 வசூல் செய்யப்படுகிறது.
இண்டஸ்லேண்ட் வங்கி :
வாரநாட்களில் நீங்கள் செய்யும் செலவுகளில் தலா ரூ.100 க்கு ஒரு ரிவார்டு பாயிண்ட் மற்றும் வார இறுதி நாட்களில் ரூ.100 செலவு தொகைக்கு 2 ரிவார்டு பாயிண்ட் ஆகியவை இந்த கார்டில் வழங்கப்படுகின்றன. இதில் 1.8 சதவீத எக்ஸ்சேஞ்ச் மார்க் அப் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கார்டை வாங்கும்போது ஒருமுறை கட்டணமாக ரூ.9,999 செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு ஆண்டு பராமரிப்பு கட்டணம் கிடையாது.
also read : Digital banking சேவை என்றால் என்ன? அது செயல்படும் விதம் குறித்த விவரம்!
ஹெச்டிஎப்ஸி டைனர்ஸ் கார்டு:
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவிலும் ரூ.150 தொகைக்கு 5 ரிவார்டு பாயிண்ட்களும், வார இறுதியில் ரெஸ்ட்ராண்ட்களில் செய்யும் செலவுக்கு 2 எக்ஸ் ரிவார்டு பாயிண்ட்களும் கிடைக்கும். இதில், எக்ஸ்சேஞ்ச் மார்க் அப் கட்டணம் 2 சதவீதம் ஆகும். இந்தக் கார்டை வாங்கும்போது ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ் ரிசர்வ் கிரெடிட் கார்டு ;
இந்தியாவில் செய்யும் செலவுகளில் ரூ.200 க்கு 15 எட்ஜ் ரிவார்டு பாயிண்ட்ஸ்களும், வெளிநாடுகளில் செய்யும் ரூ.200 செலவுக்கு 30 எட்ஜ் ரிவார்டு பாயிண்ட்ஸ்களும் வழங்கப்படுகின்றன. ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களில் பிரத்யேக சலுகை கிடைக்கும். கார்டு ஆக்டிவேஷன் செய்யும்போது 50,000 ரிவார்டு பாயிண்ட்களை பெற்றுக் கொள்ளலாம். இதன் ஆண்டு கட்டணம் ரூ.50,000 ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.