75வது சுதந்திரதின விழாவை நாம் கொண்டாடவுள்ள நிலையில், இந்தியர்களாகிய நாம் அனைவரும் நிதி சுதந்திரத்துடன் இருக்கிறோமா? என்ற கேள்வி அனைவருக்கும் நிச்சயம் எழக்கூடும். அது என்ன நிதி சுதந்திரம்? என்று கேட்கிறீர்களா? நம்மில் அரிதாகப் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளில் அதுவும் ஒன்று. பொதுவாக நிதி சுதந்திரம் என்பது மீண்டும் பணத்திற்காக உழைக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு பணம் வைத்திருப்பதாகும்.
ஆண்களோ அல்லது பெண்களோ தங்கள் பொருளாதாரத் தேவைகளைத் தாங்களே நிவர்த்தி செய்துகொள்ளும் வகையிலான நிதி சுதந்திரத்துடன் (Financial Freedom) இருக்க வேண்டும் என்ற கனவுடன் உள்ளனர். ஆனால் நாம் உண்மையான நிதி சுதந்திரத்துடன் இருக்கிறோமோ? அல்லது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகங்களுக்கு இங்கே விடைக்காண்போம்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நல்ல நிதி பழக்கவழக்கங்கள், முறையான திட்டமிடல் மற்றும் முதலீடு இருக்கும் பட்சத்தில் உண்மையான நிதி சுதந்திரத்தை நாம் அடையமுடியும். ஆனால் இதில் 2 விஷயங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதாவது நிதி சுதந்திரம் என்பது முன் கூட்டியே ஒய்வு பெறுவதற்கான விருப்பத்தைப் பெற போதுமான பணத்தை வைத்திருப்பது மற்றும் போதும் என்ற பணத்துடன் ஆரம்ப கால ஒய்வு பெறுவதாகும். ஆனால் இதெல்லாம் உங்களை நிதி சுதந்திரமாக வைத்திருக்க உதவுமா? என்பதை முதலில் நீங்கள் யோசித்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக இன்றைக்கு உள்ள சூழலில் ஆண்டுக்கான செலவினங்களில் 30-40 மடங்கு கார்பஸ் நிதி சுதந்திரத்தை அடைவதற்கு நல்லது என்கிறார்கள். ஆனால் வருமானம் இல்லாத போது உங்களின் செலவுகள் ஆண்டுக்கு சுமார் ரூ. 10 லட்சமாக இருந்தால், 30 – 40 X விதிமுறைப் பயன்படுத்தினால், ரூபாய் 3-4 கோடி கார்பஸ் உங்களுக்குத் தேவைப்படும். இது போன்று கணக்குப்போட்டு பார்த்தலே நாம் நம்முடைய வாழ்வில் முழுமையான நிதி சுதந்திரத்தை அடைந்துவிடுமோ? என அச்சம் அனைவருக்கும் எழக்கூடும். எனவே இதுப்போன்ற சூழலில் இதற்கு என்ன செய்ய வேண்டும்? என நாம் அறிந்துக்கொள்வோம்.
Also Read : இன்னும் டைம் இருக்கு..பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நீங்களும் சொந்த வீடு கட்டலாம்!
சுதந்திர இந்தியாவில் நிதி சுதந்திரத்துடன் இருக்க வழிமுறைகள்:
உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு என எதிர்காலத்திற்கான பணத்தை நீங்கள் தனித்தனியாக சேமிக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள கார், பைக் போன்றவற்றை சரி செய்வது, வீடு பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு, மருத்துவ செலவுகள் போன்ற அத்தியவாசிய தேவைகளுக்கு என பணத்தை தனித்தனியாக சேமித்துக்கொள்ள வேண்டும்.
காப்பீடு இல்லாத எதிர்பாராத மற்றும் திட்டமிடப்படாத செலவுகளுக்கு நீங்கள் உங்களுக்கானப் பணத்தை தயார் செய்ய வேண்டும். இதோடு இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு உங்களை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்குரிய வருமானத்தையும் நீங்கள் பெற்றிருப்பது அவசியம்.
Also Read : இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட 7 நிறுவனங்கள்!
பொதுவாக இந்தியர்களாகிய நமக்கு ஆயுட்காலம் முன்பு போன்று இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் வயதானவர்கள் தான் மரணிக்கும் நிலை இருந்தது. ஆனால் துரதிஷ்டவமாக இன்றைக்கு நீண்ட காலம் வாழ்வதற்கு பலருக்கு கொடுத்து வைப்பதில்லை. எனவே ஓய்வுக்கு பிறகு நீங்கள் எப்படி வாழ உள்ளீர்கள்? அல்லது இருப்பது போதும் என்ற மனநிலை என எதுவாக இருந்தாலும் அதற்கேற்ப கார்ஸ் நிதியை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்களை ஓரளவிற்கு நிதி சுதந்திரத்துடன் வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Independence day, Personal Finance