Home /News /business /

கொரோனாவால் கிடுகிடுவென உயர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் மவுசு.. பாலிசி மற்றும் வளர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா? 

கொரோனாவால் கிடுகிடுவென உயர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் மவுசு.. பாலிசி மற்றும் வளர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா? 

காட்சி படம்

காட்சி படம்

கொரோனா தொற்றுநோய் நமக்கு ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் நமக்கு ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது. கொரோனா 3வது அலையால் டிசம்பர் 2021ம் ஆண்டு முதல் ஜனவரி 2022 வரை லாக்டவுன் நடைமுறைகளுக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, பிப்ரவரியில் வணிக பீரியம் 22.47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 27,464 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.

எஸ்பிஐ ரிப்போர்ட்டில், "பிப்ரவரியில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் NBP 22.47 சதவிகிதம் உயர்ந்து 27,464.76 கோடி ரூபாயாக இருந்தது, LIC இன் NBP 35.4 சதவிகிதம் உயர்ந்து 17,849.34 கோடி ரூபாயாகவும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 9,975 கோடி ரூபாயாகவும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக முகவர்கள் வெளியே செல்ல இயலாததால், FY21 மற்றும் FY22 இல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுச்சேவை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐபிஓ அறிவிப்பு, பிப்ரவரி மாத வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளிர் பங்களிப்பு:

காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சியில் பிப்ரவரி மாத வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், விற்ற மொத்த பாலிசிகளில் பெண்கள் வாங்கிய பாலிசிகளின் எண்ணிக்கை, இந்தியாவின் சராசரி அளவில் 33 சதவீதத்தை விட அதிகம் ஆகும். 2021ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 93 லட்சம் பெண்கள் பாலிசி எடுத்துள்ளனர். இதனை ஒப்பீட்டு அளவில் பார்த்தால், 2019-20 இல் 32.23 சதவீதமாக இருந்த பங்கில் இருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளதை குறிக்கிறது. தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பெண்களுக்கான பாலிசிகளின் விகிதம் 27 சதவீதமாகவும், எல்ஐசியின் பாலிசிகள் 35 சதவீதமாகவும் உள்ளது.

also read : சீனாவில் மீண்டும் லாக்டவுன்! இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படலாம்?
 மரணம் தொடர்பான க்ளைம்:


2021ம் நிதியாண்டில் மட்டும் ஆயுள் காப்பீட்டுத்துறையில் இறப்பு தொடர்பான க்ளைம்கள் 40.8 சதவீதமாக அதிகரித்து ரூ.41,958 கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீட்டு வணிகத்தைப் பொறுத்தவரை, FY21 இன் போது, ​​ஆயுள் காப்பீட்டாளர்கள் 10.84 லட்சம் க்ளைம்களைச் செலுத்தியுள்ளனர். இதன் மொத்தப் பயன் தொகை ரூ. 26,422 கோடி ஆகும். இதன் வளர்ச்சி சதவீதம் 46.4 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.

இறப்பு உரிமை கோரல்களின் அளவு FY20ம் ஆண்டு 2.13 லட்சமாக இருந்த நிலையில், FY21 இல் 2.44 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தின் போது அதிகரித்த இறப்புகள் காரணமாக இறப்பு உரிமைகோரல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் விற்பனை:

பாலிசிகள் எடுப்பது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட போதிலும், ஆன்லைன் மற்றும் இணையத் திரட்டிகள் மூலம் விற்கப்படும் பாலிசிகளின் பங்கு பிரீமியம் மதிப்பின் அடிப்படையில் வெறும் 1.9 சதவீதமாகவும், பாலிசிகளின் எண்ணிக்கையில் 1.6 சதவீதமாகவும் உள்ளது. தற்போது காப்பீட்டு நிறுவனங்களிடையே பிரபலமாகி வரும் பேங்க்ஸ்யூரன்ஸ் முறையில், பிரீமியம் வசூல் பங்கு FY14 இல் 16.6 சதவீதத்தில் இருந்து FY21 இல் 29 சதவீதமாக அதிகரித்துள்ளது.

also read : எல்.ஐ.சியில் சிங்கிள் ப்ரீமியம் செலுத்தி ரூ.12,000 ஓய்வூதியம் பெறலாம்.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க?

தனியார் காப்பீட்டாளர்களைப் பொறுத்தவரை, பேங்க்ஸ்யூரன்ஸ் பங்கு சுமார் 55 சதவீதமாக உள்ளது. அதே சமயம் எல்ஐசி பெரும்பாலும் 'தனிப்பட்ட முகவர்களை' சார்ந்துள்ளது. தனிநபர் முகவர் பங்கு குறைந்து வருகிறது மற்றும் ஆயுள் காப்பீட்டாளர்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த தொழில் மட்டத்தில் 58 சதவீதமாக உள்ளது. இதில் தனியாருக்கு 23 சதவீதம் மற்றும் எல்ஐசிக்கு 94 சதவீதமும் ஆகும்.


காப்பீடு ஊடுருவல்:

இந்தியாவில் காப்பீட்டு ஊடுருவல் தாராளமயமாக்கல் காரணமாக FY01 இல் 2.71 சதவீதத்திலிருந்து FY09 இல் 5.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் அதன் பிறகு, ஊடுருவல் அளவு குறைந்து FY14 இல் 3.30 சதவீதத்தை எட்டியது. இருப்பினும், குறிப்பிடத்தக்க அரசாங்க ஆதரவு மற்றும் PMJJBY (பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா) மற்றும் PMSBY (பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) போன்ற காப்பீட்டுத் திட்டங்களுடன், காப்பீட்டு ஊடுருவல் காரணமாக FY15 முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. FY21 இல் 4.20 சதவீதமாக உள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Corona, Life Insurance

அடுத்த செய்தி