சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்! பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்

கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை பத்து டாரல்கள் அதிகரித்தால், இந்தியாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு செலவு அதிகரிக்கும்.

சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்! பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2019, 11:07 PM IST
  • Share this:
சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, விரைவில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.

சவுதியில் அரசுக்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்திற்கு அபெக் மற்றும் குர்அய்ஸ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் ஏமனிலிருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சவுதி அரசு கூறியுள்ளது. ஹவுதி கிளார்ச்சியாளர்கள் வெறும் அம்பாகவே செயல்பட்டதாகவும், ஈரான் நாடே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் சவுதி தெரிவித்துள்ளது.

தாக்குதல் காரணமாக, அபெக் மற்றும் குர்அய்ஸ் நிறுவனங்களில் நாள் ஒன்றுஙககு 5.7 மில்லியன் பாரல் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவின் எண்ணெய் தேவையில் 83 சதவிகிதத்தை மற்ற நாடுகளே பூர்த்தி செய்கின்றன.


ஒரு பீப்பாயின் விலை பத்து டாரல்கள் அதிகரித்தால், இந்தியாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு செலவு அதிகரிக்கும். இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாகுறையும் புள்ளி 5 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மேலும் சுணக்கம் ஏற்படும் என்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்று பெரும் சரிவு காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 642 புள்ளிகள் சரிந்து 36,481 புள்ளிகளில் நிறைவடைந்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 186 புள்ளிகள் சரிந்து 10,818 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பொருளாதாரத்தின் மீது அதிக அழுத்தத்தை தரும் என்ற அச்சதால் இன்று சந்தைகள் சரிந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்தியாவிடம் 12 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதால், கச்சா எண்ணெய் இருப்பு குறையும் போது தான் பெட்ரோல் டீசல் விலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்குள் சர்வதேச நிலவரங்கள் சரி செய்யப்பட்டுவிடும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
First published: September 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்