ஆதார் கார்டு UIDAI-ஆல் வழங்கப்படுகிறது. இதுவருமான வரி தாக்கல் செய்தல், வங்கி கணக்கை உருவாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பான் கார்டு (PAN Card) வருமான வரி துறையால் வழங்கப்படுகிறது. e-PAN என்பது வருமான வரி துறையால் எலெக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட PAN Card ஆகும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது உங்கள் PAN நம்பரை குறிப்பிடுவது கட்டாயமாகும்.
எனவே உங்களுக்கு Permanent account number எனப்படும் PAN நம்பர் இல்லை என்றால், உங்கள் ஆதார் மற்றும் உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் உதவியுடன் உங்கள் e-PAN நம்பரை இலவசமாக கிரியேட் செய்யலாம். மேலும் e-PAN-ஐ கிரியேட் செய்வது மற்றும் இதற்கு ஆன்லைன் செயல்முறை போதுமானது மற்றும் நீங்கள் எந்த படிவத்தையும் நிரப்ப தேவையில்லை.
ஆதார் மூலம் e-PAN-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
* முதலில் வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும் அல்லது https://www.incometax.gov.in/iec/foportal என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
* ஹோம் பேஜில் இருக்கும் Quick Links செக்ஷனில் உள்ள 'Instant E-PAN' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* ஓப்பனாகும் புதிய பேஜில் காணப்படும் 'Get New e-PAN' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* உங்களுக்கான e-PAN ஒதுக்கீட்டை பெற நீங்கள் உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும். பின் I confirm that என்ற பாக்ஸை டிக் செய்த பிறகு, Continue பட்டனை tap செய்ய வேண்டும்.
* இதற்கு பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதார் OTP-யை பெறுவீர்கள். நீங்கள் தேவையான இடத்தில் இந்த OTP ஐ வழங்க வேண்டும் மற்றும் 'Validate Aadhaar OTP and Continue' பட்டனை கிளிக் செய்யவும்.
* OTP வேலிடேஷன் பேஜில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று, Continue பட்டனை அழுத்த வேண்டும்.
* உங்கள் OTP-ஐ டைப் செய்து பாக்ஸை சரிபார்த்து Continue பட்டனை மீண்டும் ஒருமுறை tap செய்யவும்.
* உங்கள் இமெயில் ஐடி அங்கீகரிக்கப்படவில்லை எனில், 'Validate email ID' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் credentials-களை என்டர் செய்து Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
* உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்க சமர்ப்பித்தவுடன் உங்களுக்கு ஒப்புகை எண் (acknowledgment number) வழங்கப்படும்.
* உங்கள் ஆதார் எண்ணை என்டர் செய்வதன் மூலம் உங்கள் பான் ஒதுக்கீட்டின் (PAN allotment) ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.
* உங்களுக்கான e-PAN கிடைத்த பிறகு அதை டவுன்லோட் செய்ய 2 ஸ்டெப்ஸ்களை முடிக்க வேண்டும், 'Check Status/Download PAN' ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் captcha code-ஐ வழங்கவும், பின் Submit ஐகானை தட்டவும், OTP-ஐ என்டர் செய்து சரிபார்த்து ப்ராசஸை முடிக்கவும்.
* PAN allocation வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்தால் PDF ஃபைல் லிங்க் 10 நிமிடங்களுக்குள் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Pan card