ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவில் சக்கைபோடு போட்ட ஐபோன் விற்பனை.. சிஇஓ மகிழ்ச்சி!

இந்தியாவில் சக்கைபோடு போட்ட ஐபோன் விற்பனை.. சிஇஓ மகிழ்ச்சி!

ஐபோன்

ஐபோன்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 14 மொபைல் போன்கள் மிக விரைவிலேயே சந்தைக்கு வரும் என தெரிகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவிலிருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் மூலம் கிடைக்கும் வருமானம், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.

  சமீபத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஐபோனுக்கான ரசிகர் கூட்டம் அதிகமாகி வருகிறது முன்னர் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஐபோன், தற்போது அனைத்து தரப்பு மக்களினாலும் விரும்பப்பட்டு வருகிறது. அதிலும் ஐபோன்களுக்கான சப் ப்ராடக்டுகளான ஏர் பாட்ஸ் போன்றவை அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. மேலும் தற்போது புதியதாக வெளியிடப்பட்ட ஐபோன் 14 சீரிஸும் நன்றாக விற்பனையாகி வாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டின் குக் இந்தியாவில் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாயானது இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

  2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் கிடைத்த வருவாயை பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிக்கை வெளியிட்டார். “இந்தியாவில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மிக வலிமையான ஆச்சரியத்தக்க வளர்ச்சியை நாங்கள் பெற்றுள்ளோம்.

  கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் நான்காம் கால்பகுதியில் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாயானது இரண்டு இலக்க விகிதத்தில் அதிகரித்துள்ளது முக்கியமாக தென்கிழக்கு ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதிக வருமானம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

  ஆப்பிள் நிறுவனத்தின் சிஎஃப்ஓ, லூக்கா மேஸ்திரியும் இதே கருத்தை ஆமோதித்துள்ளார். நான்காவது காலாண்டில் ஆப்பில் நிறுவனத்தின் வருமானம் மற்றும் செயல் திறன் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  இது மட்டுமல்லாமல் தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மற்றும் மெக்சிகோ ஆகிய இடங்களில் சென்ற வருடத்தை விட இரண்டு மடங்கு வருமானம் இந்த ஆண்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  இதில் ஆச்சரியபடத்தக்க விஷயம் என்னவென்றால் ஐபோன்களின் விலை ஆனது மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம். இந்தியாவில் விதிக்கப்படும் வரி மற்றும் ஐபோன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

  Read More: அண்டார்டிக்காவில் சுருங்கி வரும் ஓசோன் ஓட்டை..! விஞ்ஞானிகள் கணிப்பு

  மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 14 மொபைல் போன்கள் மிக விரைவிலேயே சந்தைக்கு வரும் என தெரிகிறது. இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனம் ஐபோன் 14 மொபைலுக்கான பாகங்களை ஒன்று சேர்த்து விற்பனைக்கு கொண்டு செல்லும் வேலையை செய்து வருகிறது.

  Read More: அடுத்த வாரம் அலுவலகங்களை மூடும் ஸ்பாட்டிஃபை : காரணம் இது தான்!

  இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், மற்ற நாடுகளை விட இந்தியா, வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகளில் தான் ஐபோனின் விலை அதிகமாக உள்ளது. ஆனாலும் மற்ற இடங்களை விட இந்த நாடுகளில் தான் ஐபோனுக்கான விற்பனை மிக அதிகமாக உள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சந்தையில் எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதையும், ஐபோன்கள் மக்களை எந்த அளவு கவர்ந்துள்ளது என்பதையும் காணலாம். மேலும் உலக சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Apple iphone