உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகங்கள் ஆண்டுதோறும் எவ்வளவு வருமானம் ஈட்டி இருக்கிறது என்ற அறிக்கை வெளியிடும். அது மட்டும் இல்லாமல் உலகின் முதல் 10 பணக்காரர்கள், 50 பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்படும் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகும். இதில் குறைந்தது சில 1000 கோடி ரூபாய்களாவது இவர்களின் ஆண்டு வருமானமாக இருக்கும்.
ஆண்டுக்கு ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி ரூபாய் என்று பணம் ஈட்டும் நிறுவனங்கள், ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை தெரிந்தால் கண்டிப்பாக தலை சுற்றும்! இதில், ஆப்பிள், மைக்ரோசாப்ட் என்று உலக அளவில் இயங்கி வரும் பல நிறுவனங்களுக்கும் போட்டி உள்ளது. மேலும், ஒரு நிறுவனம், நொடிக்கு ₹1,50,000 வருமானம் ஈட்டுகிறது என்றால் நம்ப முடிகிறதா? இதை பற்றி முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஒரு நொடிக்கு ₹1.48 லட்சம் ஈட்டும் நிறுவனம் ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் தான்! உலகின் அதிக லாபம் ஈட்டும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஐபோன் நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது. ஒரு நாளைக்கு ₹1282 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர்கள் மதிப்பில், இந்த வருமானம், நொடிக்கு $1,820 மற்றும் ஒரு நாளைக்கு $157 மில்லியன் ஆகும்.
எந்த நிறுவனம் எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன என்ற விவரங்களை அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் நிதி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் ஆன டிபால்டி என்ற நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
செயல்திறன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள கூகுள்..!
இந்த மூன்று நிறுவனங்களுமே நொடிக்கு 1000 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கின்றன மற்றும் ஒரு நாளில் 100 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நொடிக்கு ₹1.14 லட்சமும்($1404), மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் நொடிக்கு ₹1.10 லட்சமும்($1348) வருமானம் ஈட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் கார்டு உங்களிடம் உள்ளதா.? யூபிஐ பேமெண்ட் செய்யும் வழிமுறை இதோ
உலகம் முழுவதும் இயங்கினாலும், உபெர் டெக்னாலஜி 2021 ஆம் ஆண்டில் $6 பில்லியன் நஷ்டம் அடைந்திருக்கிறது, அதாவது ஒரு நிமிடத்தில் $215 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மெடா மற்றும் அமேசான், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, கணிசமாக லாபம் ஈட்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Technology