• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஃபாக்ஸ்கானுக்கு அடுத்ததாக சென்னையில் மேலும் ஒரு ஐ-போன் தொழிற்சாலை - தைவானின் Pegatron நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீடு செய்கிறது!

ஃபாக்ஸ்கானுக்கு அடுத்ததாக சென்னையில் மேலும் ஒரு ஐ-போன் தொழிற்சாலை - தைவானின் Pegatron நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீடு செய்கிறது!

Tata Electronics நிறுவனமும் ஓசூரில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை $676 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

  • Share this:
அமெரிக்காவின் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களுள் ஒன்றான தைவானைச் சேர்ந்த Pegatron நிறுவனம் சென்னையில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தில் உலகளவில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக விளங்கி வரும் தைவானைச் சேர்ந்த Pegatron கார்ப்பரேஷன், தமிழகத்தில் ஐ-போன் தயாரிக்கும் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக தனது துணை நிறுவனமான Pegatron Technology Indiaவில் 1100 கோடி ரூபாய் (150 மில்லியன் டாலர்கள்) முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்காக சென்னை காசா கிராண்ட் தொழிற் பூங்காவில் 5 லட்சம் சதுர அடியிலான பரப்பளவை அந்நிறுவனம் லீசுக்கு எடுத்துள்ளது. இதனை தமிழக அரசின் உயர் அதிகாரிகளும், JLL நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் காசா கிராண்ட் நிறுவனம் மட்டும் இச்செய்தியை உறுதிப்படுத்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது ஆலையில் தயாரித்து வரும் நிலையில், 2வதாக தற்போது Pegatron நிறுவனமும் ஐபோன்கள் தயாரிக்கும் பணியில் இணைகிறது.



பெங்களூருவில் உள்ள ஐபோனின் மேலும் ஒரு உற்பத்தியாளரான Wistron நிறுவனத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து அந்நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் probation காலத்தில் வைத்திருக்கிறது. இதன் காரணமாகவும் சென்னையில் நல்ல போக்குவரத்து வசதிகள் இருப்பதாலும் தனது உற்பத்தி தொழிற்சாலையை Pegatron நிறுவனம் தமிழகத்தில் அமைக்க காரணங்களாக கூறப்படுகிறது.

BYD, Flex, Foxconn, Motorola, Nokia மற்றும் Samsung போன்ற முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இது தவிர Tata Electronics நிறுவனமும் ஓசூரில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை $676 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: