Home /News /business /

உலகின் முதல் $3 டிரில்லியன் மார்க்கெட் வேல்யூ நிறுவனமாக மாறிய ஆப்பிள்!

உலகின் முதல் $3 டிரில்லியன் மார்க்கெட் வேல்யூ நிறுவனமாக மாறிய ஆப்பிள்!

ஆப்பிள்

ஆப்பிள்

வேலை, கல்வி, பொழுதுபோக்கு என மேற்கண்ட அனைத்தும் ஆப்பிள் தனது ஹார்டுவேர், சாஃப்ட்வேர் மற்றும் மீடியா சர்வீஸ்கள் மூலம் ஆழமாக தொடும் மார்க்கெட்கள் ஆகும்.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் மார்க்கெட் வேல்யூவில் $3 டிரில்லியன் என்ற உச்சத்தை எட்டி பெரும் மதிப்புள்ள முதல் பொது வர்த்தக நிறுவனமாக சாதனை படைத்து உள்ளது. நேற்று Apple Inc.-ன் ஸ்டாக் மார்க்கெட் மதிப்பு $3 டிரில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்தது மற்றொரு சாதனையை உடைத்து. இந்த உயர்வு தொற்றுநோயின் தடைகளையும் மீறி மிகப்பெரிய டெக்னலாஜி நிறுவனத்தின் பல தசாப்த கால வளர்ச்சி எவ்வாறு டர்போசார்ஜ் ஆகி இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

முதல் முதலாக ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட் வேல்யூ கடந்த ஆகஸ்ட் 2018-ல் $1 டிரில்லியன் லிமிட்டை கடந்தது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2020-ல் $2 டிரில்லியன் என்ற லிமிட்டை கடந்தது. வர்த்தக நாளின் முடிவில் ஷேர் வேல்யூவை அப்படியே வைத்திருக்க தவறினாலும், $3 டிரில்லியன் என்ற உச்சத்தை எட்டி இந்த மைல்கல்லை முதலில் எட்டி இருக்கும் பொது வர்த்தக நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. நேற்றைய வர்த்தக நாளில் இது 2.5% உயர்ந்து $182.01 ஆகவும் சந்தை மூலதனம் (market capitalization) $2.99 டிரில்லியன் ஆகவும் முடிந்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஷேர் விலை கடந்த பல ஆண்டுகளாக ஒரே சீராக உயர்ந்து வருகிறது, அதிலும் கடந்த ஒன்றரை ஆணுக்களுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்டின் முதலாம் அலை மிக தீவிரமாக இருந்த 2020-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுனால் வேலை, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் மக்கள் இணைந்திருக்க அடித்தளமாக விளங்க காரணமாக தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 200% க்கும் அதிகமாக உள்ளது.

வேலை, கல்வி, பொழுதுபோக்கு என மேற்கண்ட அனைத்தும் ஆப்பிள் தனது ஹார்டுவேர், சாஃப்ட்வேர் மற்றும் மீடியா சர்வீஸ்கள் மூலம் ஆழமாக தொடும் மார்க்கெட்கள் ஆகும். தொற்று காரணமாக இவை அனைத்திற்கும் தொழில்நுட்ப தேவை அதிகரித்து காணப்பட்டதால் $2 டிரில்லியன் மதிப்பைத் தாண்டிய சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு, $3 டிரில்லியன் டாலர்களை எட்டிய வரலாற்றில் முதல் நிறுவனமாக ஆப்பிள் மாறுவதற்கு பங்களித்து இருக்கிறது.

Also read... ஸ்மார்ட் வாட்ச் இல்லாமல் Android மற்றும் iOS-ல் ஹார்ட் ரேட்டை அளவிடுவது எப்படி!

விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் மற்றும் அட்டானமஸ் எலெக்ட்ரிக் வெஹிகிள் போன்ற புதிய சலுகைகளுடன், முக்கிய தயாரிப்புகள், நிலையான வருவாய் வளர்ச்சி ஆகியவற்றுடன் ஆப்பிளின் தயாரிப்புகள் வலுவான நீண்ட கால கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. MainStay Winslow Large Cap Growth Fund-ன் இணை-போர்ட்ஃபோலியோ மேலாளர் பேட்ரிக் பர்டன் கூறுகையில், $3 டிரில்லியன் மார்க்கெட் கேப்-ஐ பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் இது உண்மையில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ப்புகளை பற்றி தெரிவிக்கிறது. இது ஒரு சிறந்த வளர்ச்சிப் பங்காக உள்ளது, மேலும் மதிப்பீடு நிலையானது என்றார்.

Also read... உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்...!

ஆகஸ்ட் 2020-ல் $2 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டியபோது இந்த அளவைத் தாண்டிய முதல் அமெரிக்க நிறுவனமாக ஆப்பிள் இருந்த போதிலும், ஒட்டுமொத்தமாக சவுதி அராம்கோ முதன் முதலில் $2 டிரில்லியனை எட்டிய நிறுவனமாக இருந்தது. 2021 ஆம் ஆண்டில் Apple பங்குகள் ஏறக்குறைய 35% அதிகரித்தன. நிறுவனம் அதன் புதிய ஐபோன் 13 மற்றும் பிற பழைய மாடல்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் Apple Music, Apple TV+, iCloud மற்றும் அதன் பிரபலமான ஆப் ஸ்டோர் போன்ற சந்தா சேவைகளாலும் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Apple

அடுத்த செய்தி