உலகம் முழுவதும் நாளுக்கு நாள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகிறது. தங்களின் அவசரத் தேவைகளுக்குத் தான் வாகனங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் சில நேரங்களில் அதிக வேகம் மற்றும் வாகனங்கள் பழுதடைவதால் ஏற்படும் விபத்துக்கள் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.
அதிலும் தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை தினமும் சராசரியாக 2 விபத்துக்களாவது அரங்கேறி வருகிறது. குறிப்பாக எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்களால் சில நேரங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குடும்பத்தையே நிலைகுலைய செய்துவிடும். இந்நேரத்தில் தான் விபத்துக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து தெரியவரும். இதற்காகவே பல வாகன விபத்துக் காப்பீடு இன்சுரன்ஸ் திட்டங்கள் இருந்தாலும் டெர்ம் கவர் இன்சுரன்ஸ் எனப்படும் கால காப்பீடு திட்டம் மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு திட்டம் அதிகளவில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இருந்தப் போதும் கால காப்பீடு திட்டத்தினால் மக்கள் அதிகளவில் இன்சுரன்ஸ் செய்து வருகின்றன. விபத்தில் உயிரிழந்தால் மட்டுமே இதன் மூலம் நாம் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒருவேளை விபத்தினால் கால் நிரந்தர ஊனம் ஆகுதல், மரணம், பகுதி நேர ஊனம், வேலையின்றி ஏற்படும் பொருளாதார இழப்பு போன்றவை ஏற்பட்டால் இதற்குத் தீர்வு காண்பதற்கு டெர்ம் இன்சுரன்ஸ் மட்டும் போதாது என்றும் தனிநபர் விபத்துக் காப்பீடும் அவசியம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். சமீபத்தில், டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். காரின் பின்புறம் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும், இதனாலேயே விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தையடுத்து தான் சாலைப் பயணம் தொடர்பான அபாயங்கள் குறித்து நாடு முழுவதும் கவனத்திற்கு வந்தது. மேலும் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை வாங்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது.
எனவே இந்நேரத்தில், தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையின் அவசியம் குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம். ஆயுள் காப்பீட்டில் இருந்து மாறுபட்டது தான் தனி நபர் விபத்து காப்பீடு. இந்த காப்பீடு திட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தினால் நிகழும் மரணம், நிரந்தர ஊனம், பகுதி ஊனம் போன்றவற்றிற்கு ஈடு செய்ய முடியும். எனவே நீங்கள் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது கூடுதல் ரைடர் ஆகவும் எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு மேற்கொள்ளும் போது விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இருமங்காக காப்பீடுத் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது இவ்வளவு நல்லதா! இத்தனை நாள் தெரியாமா போச்சே
எனவே வண்டிகளுக்கு காப்பீடு எடுக்கும் போது கண்டிப்பாக இணைத்துக் கொள்ளப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு, ஒவ்வொரு ஆண்டும் இதற்கான தவணைத் தொகையை செலுத்த முடியும் எனவும் காப்பீட்டின் படி உறுதித் தொகையானது ரூ.15 லட்சம் ஆகும். மேலும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு வங்கிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.20 என்ற குறைந்த பிரிமீயம் மூலம் ரூ. 2 லட்சம் வரை இழப்பீடுத் தொகை பெறமுடியும். எனவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இன்சுரன்ஸ் செய்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Insurance, Tamil News