ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆகப் பதவி வகித்து வந்த அனில் அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிகப்படியான கடன் பிரச்னைகளால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தவித்து வருகிறது. அனில் அம்பானி உடன் இயக்குநர்கள் பதவியில் இருந்த சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கெர், சுரேஷ் ரங்காஷார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்தில்தான் மற்றொரு இயக்குநர் பதவியிலிருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மணிகண்டன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடுமையான கடன் பிரச்னையால் தத்தளித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஜூலை- செப்டம்பர் 2019 காலகட்டத்தில் மட்டும் 30,142 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க: 1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற டிக்டாக்... வருவாய் அளிக்கும் இந்தியா..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.