மஹிந்திரா குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஆனந்த் மஹிந்திரா..!

நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வரும் பவன் கோயங்கா கூடுதல் பொறுப்பாக தலைமை நிர்வாகி பதவியையும் ஏற்பார்.

மஹிந்திரா குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஆனந்த் மஹிந்திரா..!
ஆனந்த் மஹிந்திரா
  • News18
  • Last Updated: December 20, 2019, 4:48 PM IST
  • Share this:
மஹிந்திரா குழுமத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஆனந்த் மஹிந்திரா வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அன்று பதவி விலகுகிறார்.

அதற்குப் பின்னர் மஹிந்திரா நிறுவனத்தின் ஆலோசகர் பதவியை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகம் சாரா தலைவர் ஆக வருகிற 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆனந்த் மஹிந்திரா பதவி ஏற்பார். செபி விதிமுறையின் அடிப்படையிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வரும் பவன் கோயங்கா கூடுதல் பொறுப்பாக தலைமை நிர்வாகி பதவியையும் ஏற்பார். ஆனந்த் மஹிந்திரா இனிமேல் நிர்வாகத்தின் ஆலோசகராக நிர்வாகத்தின் திட்ட வடிவமைப்பு, பிரச்னை மேலாண்மை மற்றும் வெளிப்புற உதவி ஆகிய பிரிவுகளில் பணியாற்ற உள்ளார்.


மேலும் பார்க்க: இந்த வகை டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? டிசம்பர் 31 தான் கடைசி நாள்!
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்