Bravo Mukesh..! ரிலையன்ஸ் ஜியோ - ஃபேஸ்புக் ஒப்பந்தத்துக்காக மஹிந்திரா நிறுவனர் பாராட்டு..!

புதிய வளர்ச்சி மையமாக உலகம் இந்தியாவை நோக்கி நகரும் என்னும் கருத்தாக்கத்தை அது மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்

Bravo Mukesh..! ரிலையன்ஸ் ஜியோ - ஃபேஸ்புக் ஒப்பந்தத்துக்காக மஹிந்திரா நிறுவனர் பாராட்டு..!
ஆனந்த் மஹிந்திரா
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைதொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, 9.99% பங்குகளை அமெரிக்க சமூகவலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக்குக்கு $5.7 billion., அதாவது 43,574 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், ஜியோ தளங்களின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக்.  இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவிருக்கிறது ஃபேஸ்புக்.

ரிலையன்ஸ் ஜியோ - ஃபேஸ்புக் ஒப்பந்தம் அந்த இரு நிறுவனங்களுக்கும் மட்டும் இல்லாமல், மற்றவைக்கும் பயனுடையது. அதாவது, இந்த கொரோனா தொற்றுக் காலத்துக்குப் பிறகு, இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவத்துக்கான வலுவான அறிகுறி அது. புதிய வளர்ச்சி மையமாக உலகம் இந்தியாவை நோக்கி நகரும் என்னும் கருத்தாக்கத்தை அது மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். ப்ராவோ முகேஷ்!


ரிலையன்ஸ் ஜியோ - ஃபேஸ்புக் ஒப்பந்தம், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தின் தொடக்கமாக இருக்கலாம். Paytm மற்றும் PhonePe போன்ற நிறுவனங்களுக்கு ஒரு போட்டியாளராக விளங்கலாம். ஃபேஸ்புக், சோதனை நிலையில் இருக்கும் தன்னுடைய வாட்ஸ்-அப் அப்ளிகேஷன் வழியாக பணம் அனுப்பும் செயல்பாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.








First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading