ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவிலேயே அதிக கார் எங்க இருக்கு? லிஸ்டை வெளியிட்ட ஆனந்த் மகேந்திரா..

இந்தியாவிலேயே அதிக கார் எங்க இருக்கு? லிஸ்டை வெளியிட்ட ஆனந்த் மகேந்திரா..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளை சுட்டிக்காட்டி கார் வைத்திருப்போரின் பட்டியலை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக,குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இருப்பின் அவர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றாலோ, மழை காலங்களில் ஆஃபிஸ், ஸ்கூல் செல்ல வேண்டும் என்றாலும் கார் நிச்சயம் தேவைப்படும். ஆனால்  கார் வாங்க அனேகமானவர்களுக்கு வாய்ப்புகள் இருக்காது. சிலர் புதிய கார்களை வாங்குவர், அதுவே புதிய கார் வாங்க முடியாதவர்கள் தங்கள் தகுதிகேற்றார் போல் கார் வாங்க யோசிப்பார்கள். ஏனென்றால் காரின் தேவை அந்த அளவு அவசியமானதாக இருக்கிறது.

இந்நிலையில் நாட்டிலேயே கார்கள் அதிகம் வைத்திருப்போர் பட்டியலில் கோவாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளை சுட்டிக்காட்டி கார் வைத்திருப்போரின் பட்டியலை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ளார். அதன்படி,

இந்த பட்டியலில் கோவாவில் 45 புள்ளி 2 விழுக்காடு மக்கள் கார்களை சொந்தமாக வைத்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 24 புள்ளி 2 விழுக்காடு மக்கள் சொந்தமாக கார்கள் வைத்துள்ளனர்.
இதற்கு அடுத்த இடங்களில் 23.7 சதவீதத்துடன் ஜம்மு-காஷ்மீர், 22.1 சதவீதத்துடன் இமாச்சலபிரதேசம், 21.9 சதவீதத்துடன் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆறரை சதவீதம் மக்கள் மட்டுமே கார்களை சொந்தமாக வைத்துள்ளதாகவும்,
நாட்டிலேயே மிகக்குறைவாக பீகாரில் வெறும் 2விழுக்காடு பேர் மட்டுமே, சொந்தமாக கார் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 7.5 சதவீதம் பேர் சொந்தமாக கார் வைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
First published:

Tags: Automobile, Car, Tamil Nadu, Trending