உங்கள் பட்டர் பிஸ்கேட்டில் வெண்ணெய் இருக்கா? அதிர்ச்சியில் பிரிட்டானியா, பார்லே...!

அமுல் பட்டர் பிஸ்கட் விலை பிற தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது 2 மடங்கு அதிகமாக உள்ளது. 40 கிராம் அமுல் பட்டர் பிஸ்கட் விலை 10 ரூபாய் என்று விற்கப்படுகிறது.

news18
Updated: July 24, 2019, 10:22 PM IST
உங்கள் பட்டர் பிஸ்கேட்டில் வெண்ணெய் இருக்கா? அதிர்ச்சியில் பிரிட்டானியா, பார்லே...!
அமுல்
news18
Updated: July 24, 2019, 10:22 PM IST
ஒரே தயாரிப்புகளைச் செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் போட்டி அதிகமாக இருக்கும். அதிலும் புதியதாக ஒரு நிறுவனம் போட்டியாக வரும் போது ஒரு நிறுவனத்தின் சந்தை இழப்பானது மிக அதிகமாகவும் இருக்கும்.

அப்படி பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் அண்மையில் பிஸ்கேட் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. அது போட்டி நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதன் விளம்பரம் பிரிட்டானியா, பார்லே, ஐடிசி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அமுல் நிறுவனம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “நீங்கள் சாப்பிடும் பட்டர் பிஸ்கட்டில் வெண்ணெய் இருக்கிறதா? அல்லது காய்கறி எண்ணெய்யா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
Loading...


மேலும் அமுல் நிறுவனத்தின் பட்டர் பிஸ்கட்களில் 25 சதவீத வெண்ணெய் உள்ளது. பிற நிறுவனங்களின் பட்டர் பிஸ்கேட்கலில் 0.3 முதல் 3 சதவீதம் வரையில் மட்டுமே பட்டர் உள்ளது என்றும், சந்தேகம் இருந்தால் உங்கள் பிஸ்கட் பாக்கெட்களை சரிபாருங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தது.அதை பார்த்த பிஸ்கட் பிரியர்கள், தாங்கள் விரும்பி உண்ணும் பட்டர் பிஸ்கேட் பாக்கெட்களில் 0.45 சதவீதம், 2 சதவீதம் தான் பட்டர் உள்ளது என்று பதிவிட்டு வந்தனர்.அமுல் நிறுவனத்தின் பட்டர் பிஸ்கேட்டை ஒப்பிடும் போது பிற நிறுவனங்களில் பட்டர் பிஸ்கேட்களின் விலை குறைவாக உள்ளது. அமுல் பட்டர் பிஸ்கட் விலை பிற தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது 2 மடங்கு அதிகமாக உள்ளது. 40 கிராம் அமுல் பட்டர் பிஸ்கட் விலை 10 ரூபாய் என்று விற்கப்படுகிறது. மறுபக்கம் பிரிட்டானியாவின் குட்டே பட்டர் பிஸ்கேட் 39 கிராம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் பிஸ்கட் வணிகத்தைத் தொடங்கியுள்ள அமுல், குஜராத்தில் மட்டும் அதன் விற்பனையைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் போட்டி நிறுவனங்கள் அமுலுக்குப் போட்டியாக சமூக வலைத்தளங்கள் அல்லது விளம்பரங்கள் மூலம் பதில் அளிக்கலாம்.

மேலும் பார்க்க:
First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...