• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நிதி அயோக் தலைவராக இரண்டாண்டுகளுக்கு அமிதாப் கண்ட் நீடிப்பார்!

நிதி அயோக் தலைவராக இரண்டாண்டுகளுக்கு அமிதாப் கண்ட் நீடிப்பார்!

அமிதாப் கண்ட் (கோப்புப்படம்)

அமிதாப் கண்ட் (கோப்புப்படம்)

கடந்த 2016-ம் ஆண்டு நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கண்ட் நியமிக்கப்பட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நிதி அயோக் தலைவராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமிதாப் கண்டின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் தலைவராக உள்ள அமிதாப் கண்ட் பதவிக்காலம் வருகிற ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், அமிதாப்பின் பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடரும் என்றும் வருகிற ஜூன் 30, 2021-ம் ஆண்டு வரையில் தற்போதைய விதிமுறைகளின் அடிப்படையில் பதவி நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கண்ட் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கான பணி உத்தரவுடன் நியமிக்கப்பட்ட அமிதாப்பின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டுடன் நிறைவுபெற்றது. அப்போது அமிதாப்புக்கு ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது மீண்டும் கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் தலைவராகும் முன்னர் தொழிற்சாலை கொள்கைத் திட்டம் துறையின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் பார்க்க: பயனாளர்களை வேவு பார்ப்பதில்லை- உறுதியளிக்கும் இன்ஸ்டாகிராம் சிஇஓ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: