முகப்பு /செய்தி /வணிகம் / தொழிற்சங்க போராட்டம்.. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மாறும் பிரபல நிறுவனம்

தொழிற்சங்க போராட்டம்.. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மாறும் பிரபல நிறுவனம்

தொழிற்சங்க போராட்டத்தால் பாதிப்பு

தொழிற்சங்க போராட்டத்தால் பாதிப்பு

தொழிற்சங்க பிரச்னை காரணமாக ரூ.300 கோடி மதிப்பிலான மூலிகை பொருள் ஏற்றுமதி நிறுவனம் கேரளாவில் இருந்து வெளியேறி தமிழ்நாடு வரத் திட்டமிட்டுள்ளது.

  • Last Updated :

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ரூ.300 கோடி மதிப்பிலான ஏற்றுமதி நிறுவனம் தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக முடங்கியுள்ளது. இந்த நிறுவனம் கேரளாவிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டில் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுனா நேட்சுரல் என்ற மூலிகைப் பொருள் ஏற்றுமதி நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் 250 பேருக்கு நேரடியாக வேலை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் எர்ணாகுளம் பகுதி தொழிற்சாலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பாரதிய மஸ்தூர் சங் தொழிற்சங்கத்தினர் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தொழிற்சாலை பணிகள் முடங்கியுள்ள நிலையில், வேறு வழி இல்லை என்றால் கேரளாவிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டிற்கு நிறுவனத்தை மாற்றுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே கோவை மற்றும் சத்தியமங்கலத்தில் இரு பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. முன்னதாக அர்ஜுனா நெட்சுரல்ஸ் நிறுவனம் தொழிற்சாலையில் உள்ள நான்கு பிரிவுகளில் மூன்றை மூடி, ஒன்பது தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் களமிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கம் உள்ளதாக நிறுவனத்தின் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. அதேவேளை, இந்த நிறுவனத்தில் ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் எந்த வித சிக்கலும் இல்லாமல் செயல்பட அரசு அனைத்து பாதுகாப்பையும் வழங்கும் என கேரளா தொழில் அமைச்சர் பி ராஜிவி உறுதியளித்துள்ளார். நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மாவட்ட தொழில் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இதையும் படிங்க: அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கவுள்ளது - என்னென்ன புராடக்ட்களுக்கு தள்ளுபடி தெரியுமா?

சர்வதேச அளவில் வர்த்தக விதிகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே நிறுவனம் பிரிவுகளை மூடி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளது. மற்றபடி தொழிலாளர் நலனில் எந்தவித முக்கிய மாற்றங்களையும் நிறுவ செய்யவில்லை எனக் கூறியுள்ளது.

இது தொடர்பாக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீவிஜி கூறுகையில், "எங்கள் சங்கத்தை அங்கீகரிக்க மாட்டோம் என நிறுவனம் முரண்டு பிடிக்கிறது. அதுதான் பிரச்னைக்கு காரணம். எங்கள் ஸ்ட்ரைக் காரணமாக நிறுவனத்தின் இயக்கம் தடைப்படவில்லை. நிறுவனம் புதிதாக ஒரு தொழில்நுட்பத்திற்கு ரூ.50 கோடி முதலீடு செய்துள்ளது. இது சில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: எனது கடைசி காலத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் - ரத்தன் டாடா உருக்கமான பேச்சின் பின்னணி

கேரளாவில் அரசு கடைப்பிடிக்கும் தொழில் கொள்கைகள், அங்கு தொழில் செய்வதற்கு உகந்ததாக இல்லை என பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகின்றன. இதன் காரணமாக கேரளாவுக்கு வர வேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா ஆகியவற்றுக்கு செல்கின்றன. ஏற்கனவே,முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான கைடெக்ஸ் கார்மென்ட்ஸ் நிறுவனம் கேரளாவில் மெகா ஆலை அமைக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால், தொழிற்சங்கம், தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்ள அந்நிறுவனம் முடிவெடுத்தது. தற்போது மற்றொரு நிறுவனமான அர்ஜுனா நேட்சுரல்சும் தொழிற்சங்க பிரச்னையினால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர யோசனை செய்து வருகிறது.

First published:

Tags: Investment, Labor Protest, Workers Strike