முக்கிய கனிமங்களுக்கான திட்டங்கள் மற்றும் விநியோக சங்கிலி துறையில் தங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளன. 6 நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அந்நாட்டின் வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய அமைச்சரான மேடலின் கிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா கிரிட்டிகல் மினரல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஷிப்பிற்கு 5.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய அமைச்சர் மேடலின் கிங் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் சோலார் பேனல்கள், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிப்பதற்கு, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு, முக்கியமான கனிமங்களுக்கான வளர்ந்து வரும் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்வதற்கும் உதவுவதற்கான ஆதாரங்கள் ஆஸ்திரேலியாவிடம் உள்ளன. லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற முக்கிய கனிமங்கள் ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளன. இவை பேட்டரிகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் போன்ற க்ளீன் எனர்ஜி டெக்னலாஜிகளுக்கு முக்கியமானவை.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி உற்பத்தியில் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு மத்திய அரசு பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகளவில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதால், உலகின் மிகப்பெரிய லித்தியம் ஏற்றுமதியாளரான ஆஸ்திரேலியா, முக்கிய தாதுக்களுக்கான வளர்ந்து வரும் தேவையின் கணிசமான பகுதியை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Held a detailed deliberation with Australian Minister for Resources and Northern Australia @MadeleineMHKing on cooperation in strategic minerals especially lithium. Assured full cooperation of the Indian Govt in enhancing Australian presence in the Indian mining sector. pic.twitter.com/9spvixiKSo
— Pralhad Joshi (@JoshiPralhad) July 4, 2022
இதனிடையே ஆஸ்திரேலிய அமைச்சர் மேடலின் கிங்குடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய பிரகலாத் ஜோஷி, சமீபத்தில் கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரிட்டிக்கல் மினரல் ஃபெசிலிட்டேஷன் ஆஃபிஸ் (CMFO -Critical Minerals Facilitation Office) ஆகியவை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்களின் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது. சாத்தியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டவுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளபடி பல்வேறு முறைகள் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வோம் என்றார். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நேச்சுரல் பார்ட்னர்ஸ் என்று குறிப்பிட்ட ஜோஷி, இரு நாடுகளுக்கிடையே தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவு-பகிர்வு மற்றும் லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற முக்கியமான கனிமங்களில் முதலீடு ஆகியவை க்ளீன் எனர்ஜி லட்சியங்களை அடைவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
Also Read : எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய அமைச்சர் மேடலின் கிங், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்தும் அதே வேளையில் ஆஸ்திரேலியாவில் முக்கியமான கனிமத் திட்டங்களை முன்னெடுக்க உதவும் இந்த இருதரப்பு கூட்டாண்மைக்கான இந்தியாவின் வலுவான ஆதரவை வரவேற்கிறோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.