ஈரானைத் தொடர்ந்து வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு; இந்தியா என்ன செய்யும்?

அமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.

ஈரானைத் தொடர்ந்து வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு; இந்தியா என்ன செய்யும்?
நிகோலஸ் மதுரோ
  • News18
  • Last Updated: February 14, 2019, 1:47 PM IST
  • Share this:
ஈரானிலிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் செய்துவருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் சற்றுக் குறைந்தது.

பின்னர் ரூபாய் அல்லது பண்ட மாற்ற முறையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம் என்று அமெரிக்கக் கூறியது. இதனால் மீண்டும் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இதே போன்று வெனிசுலா மீதும் சில மாதங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்துவந்தது.


தற்போது வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைச் சரி செய்ய முடிவு செய்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தியாவிடமிருந்து ரூபாய் மதிப்பு மற்றும் பண்ட மாற்ற முறையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர் தேவை என்ற நிலை மாறி இந்திய ரூபாய் மதிப்பில் செய்யும் நிலை உருவாகியுள்ளது இந்திய அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளது. மறுபக்கம் வெனிசுலாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் வர உள்ளது.அமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.

இவை ஒரு பக்கம் இருக்க அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா, வளைகுடா நாடுகளை விட அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா முன்னேரும் வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க: வளர்ச்சி பாதையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு...
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்