Home /News /business /

ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி பெருமிதம்

ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி பெருமிதம்

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

Reliance AGM 2022: கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது எனவும் கடந்த ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது எனவும் முகேஷ் அம்பானி கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார்.

    அப்போது  அவர், நாட்டின் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது எனவும் கடந்த ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது எனவும் கூறினார்.
    ரிலையன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவில் முதன் முதலில் 100 பில்லியன் டாலர்கள் வருமானம் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஓட்டுமொத்த வருமானம் 47% அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியா வலிமையாக உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுவதாக தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஊந்துசக்தியால், ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தியா முழுக்க இணைய சேவையை கொண்டு செல்ல முடிந்தது என கூறிய அவர், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய அவர், இந்தியாவிற்கு உண்மையான 5ஜி சேவை அவசியமானது என தெரிவித்தார். அதன் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி பிராட்பேண்ட் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மற்ற நிறுவனங்கள் 4ஜி-க்கான உட்கட்டமைப்பில் 5ஜி சேவையை வழங்கவுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி சேவைக்கென தனியாக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய மெட்ரோ நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: 5G technology, Mukesh ambani, Reliance AGM 2022

    அடுத்த செய்தி