மாசுபாடைக் குறைத்து காலநிலையைக் காப்போம்- உறுதி எடுத்த அமேசான்

அமேசானில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் 80 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாசுபாடைக் குறைத்து காலநிலையைக் காப்போம்- உறுதி எடுத்த அமேசான்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ்
  • News18
  • Last Updated: September 20, 2019, 7:21 PM IST
  • Share this:
காலநிலையைக் காக்க மாசுபாடுகளைக் குறைக்கும் முயற்சியில் அமேசான் நிறுவனம் முழுவீச்சில் ஈடுபடும் என அமேசான் சிஇஓ ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார்.

காலநிலைக்கான உறுதிமொழியை இன்று அறிவித்த அமேசான் சிஇஓ, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் அமேசான் பின்பற்றும் என உறுதி அளித்துள்ளது. வருகிற 2040-ம் ஆண்டுக்குள் ’கார்பன் நியூட்ரல்’ நிறுவனமாக அமேசான் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘

பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் ’கார்பன் நியூட்ரல்’ அந்தஸ்தை எட்ட வேண்டும் என உறுதி எடுத்துள்ளது. இதனால், மாசுபாடைக் குறைக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு, ப்ளாஸ்டிக் தவிர்ப்பு என பல செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது அமேசான். இதே நடைமுறையை அனைத்து நிறுவனங்களுமே பின்பற்ற வேண்டும் என்றும் ஜெஃப் பிசோஸ் அழைப்புவிடுத்துள்ளார்.


மேலும், அமேசானில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் 80 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் அமேசான் ஊழியர்கள் பலரும் இணைந்து சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவாக அமேசான் துணைபோகக் கூடாது என போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: பொருளாதாரத்தை மேம்படுத்த கார்ப்ரேட் வரி குறைப்பு - வரலாற்றுச் சாதனை என மோடி புகழாரம்!

மொழிக்கான எங்கள் போராட்டம் பெரிதாக இருக்கும் - கமல்ஹாசன்
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்