அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கவுள்ளது - என்னென்ன புராடக்ட்களுக்கு தள்ளுபடி தெரியுமா?
அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கவுள்ளது - என்னென்ன புராடக்ட்களுக்கு தள்ளுபடி தெரியுமா?
amazon
Amazon Summer Sale | அமேசான் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஆர்பிஎல் பேங்க் மற்றும் கோடக் பேங்க் ஆகியவை கூட்டு சேர்ந்து கிரெடிட், டெபிட் கார்டுகளில் 10% தள்ளுபடி அல்லது இஎம்ஐ கட்டண வசதிகளை வழங்குகிறது.
2022ம் ஆண்டிற்கான கோடைகால விற்பனையை அமேசான் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை, எனினும் இந்த விற்பனை அடுத்த வாரம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போஸ்டர்கள் அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் நேரலையில் உள்ளன. இம்முறை லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அதன் பாகங்கள், ஃபேஷன், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், கிச்சன் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் போன்ற பலவற்றிற்கு தள்ளுபடிகளை வழங்க உள்ளது.
அமேசான் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஆர்பிஎல் பேங்க் மற்றும் கோடக் பேங்க் ஆகியவை கூட்டு சேர்ந்து கிரெடிட், டெபிட் கார்டுகளில் 10% தள்ளுபடி அல்லது இஎம்ஐ கட்டண வசதிகளை வழங்குகிறது. மேலும் இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் உங்கள் முதல் பர்சேஸிற்கு 10% (₹250 வரை) கூடுதல் கேஷ்பேக்கையும் நீங்கள் பெற முடியும் என அறிவித்துள்ளனர்.
மொபைல் மற்றும் மடிக்கணினிகள்: மொபைல் மற்றும் அதன் பாகங்களை வாங்குவோருக்கு 40% தள்ளுபடி பெற முடியும். ஒன் பிளஸ், ரெட்மி, சாம்சங், ஐக்கூ, ரியல்மி, ஓப்போ, ஆப்பிள் மற்றும் பல பிராண்டுகளுக்கு சிறந்த தள்ளுபடியை இம்முறை பெறலாம். மேலும் பவர் பேங்க்கள், ஹெட்செட்கள், போன் கேஸ், சார்ஜர்கள், கேபிள்கள் மற்றும் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்கள் போன்றவற்றையும் நீங்கள் தள்ளுபடி விலையில் பெற முடியும். கேமிங் மடிக்கணினிகள் உட்பட இன்டெல் மூலம் இயங்கும் மடிக்கணினிகளுக்கும் 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வீடு மற்றும் சமையலறை பொருட்கள் : ஏசி, ஃபேன், கூலர்ஸ், மர ஜாமான்கள் மற்றும் மெத்தைகள் போன்ற பல வீட்டு உபயோக பொருட்களுக்கும் தள்ளுபடிகள் உள்ளன. சமையல் பாத்திரங்கள் மற்றும் எரிவாயு அடுப்புகளுக்கு 50% தள்ளுபடியும், வாட்டர் பியூரிபையர் மற்றும் ஏர் கூலர்களுக்கு 30% தள்ளுபடியும், லைட்டிங் புராடக்ட்களுக்கு 50% தள்ளுபடியும் கிடைக்கிறது. மேலும் இதே போன்று பல வித வீட்டு பொருட்களுக்கும் தள்ளுபடிகள் அதிக அளவில் உள்ளன.
அலெக்சா, கின்டெல் மற்றும் ஃபயர் டிவி : இந்த ஆண்டு கோடைகால விற்பனையில் அலெக்சா ஸ்மார்ட் ஹோம் ஸ்டார்டர் கிட் மீது 50% தள்ளுபடியும், ஃபயர் டிவி சாதனங்களுக்கு 48% தள்ளுபடியும் பெறலாம். மேலும், ஸ்மார்ட் டிவிகளில் 48% தள்ளுபடியும், கின்டெல் சாதனங்களுக்கு ₹3400 தள்ளுபடியும் கிடைக்க உள்ளது. இந்த தள்ளுபடியை பயன்படுத்தி நவீன எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி கொள்ளலாம்.
ஃபிரிட்ஜ் மற்றும் ஏசி : ஃபிரிட்ஜ் மற்றும் ஏசிக்களுக்கு 40-50% தள்ளுபடியும், ஒன்பிளஸ், எல்ஜி மற்றும் சாம்சங் போன்ற பரந்த அளவிலான டிவி பிராண்டுகளுக்கு 50% தள்ளுபடியும் வழங்குகின்றனர். மேலும் விலையில்லா இஎம்ஐ, எளிதான இன்ஸ்டாலேஷன் மற்றும் தயாரிப்புகளுக்கான மொத்த பாதுகாப்புத் திட்டத்துடன் சிறந்த டெலிவரி வசதி ஆகியவற்றையும் இதன் முக்கிய அம்சமாக கொண்டுள்ளனர். இத்துடன் நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டைப் பயன்படுத்தினால், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ-யை பெறலாம்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.