• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • சிறு தொழில்களை ஊக்குவிக்க Amazon.in கொண்டாடும் `அமேசான் சிறுதொழில் தினம்’!

சிறு தொழில்களை ஊக்குவிக்க Amazon.in கொண்டாடும் `அமேசான் சிறுதொழில் தினம்’!

புதிய டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் வளர்வதற்கான அனைத்து வகையிலான உதவியும் தொழில்நுட்பமும் மளிகைக் கடை வியாபாரி முதல் உள்ளூர் பலசரக்குக் கடை வரையில் உள்ள அத்தனை வணிகர்களுக்கும் வழங்கப்படும்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவின் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறுதொழில் தினம்’ #AmazonSmallBusinessDay கொண்டாடுகிறது அமேசான்.

  பல பெரிய தொழில்களும் சிறிய அளவில் தொடங்கப்பட்டவைதான். ஒரு சின்ன குடோனில் தொடங்கப்பட்டு பல பில்லியன் டாலர் வருமானங்களைக் குவித்த நிறுவனங்கள் பல இருக்கின்றன. இன்றையக் காலகட்டத்தில் இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டு வளர்ந்து வருகின்றன. இந்தச் சிறு நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியின் மூலம் நாட்டின் குடிமக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. இந்த வளர்ச்சிதான் இன்றைய இந்தியாவின் நிலை. இந்தச் சிறு தொழில்கள் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் இந்தியப் பொருளாதாரத்துக்கான முதுகெழும்பாக இருக்கிறது.

  இதுதான் ஒரு பொருளாதாரத்தில் சிறு தொழில்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை அளித்தது. ஒரு சிறு தொழிலை வளர்ச்சிப் பாதையில் நிலைக்கச் செய்வது அவ்வளவு சுலபமல்ல. ஒரு சிறு வணிகராக உள்ளூர் அளவிலே உங்கள் தொழில் முடக்கப்பட்டுள்ளதா? சென்னையின் மிகவும் பிரபலமான பொருட்களை உள்ளூரில் மட்டும் விற்றால் போதுமா? சென்னையைத் தாண்டி உங்கள் வியாபாரம் செல்ல வேண்டாமா?

  இன்டெர்நெட்டும் தொழில்நுட்பமும் தான் இன்றைய உலகைத் தீர்மானிக்கின்றன. ஆன்லைன் மூலம் ஒரு சின்ன ஸ்டார்ட் அப் தொழிலை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இ-காமர்ஸ் மூலம் Amazon.in உங்களது சிறு தொழிலைப் பெருக்குவதற்காக பல வாயில்களைத் திறக்கிறது. இதன் மூலம் உங்களால் நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் வாழும் மக்களைச் சென்றடைய முடியும். உங்கள் தொழில் சர்வதேச அளவில் பெருகுவதை நினைத்துப் பாருங்கள்? 180 நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை நீங்கள் Amazon.in மூலம் சென்றடையலாம்.

  உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், விநியோகஸ்தர், சில்லரை வியாபாரி, சுயதொழிலாளி என அனைவருக்குமான விற்பனைத் தளம் Amazon.in. புதிய டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் வளர்வதற்கான அனைத்து வகையிலான உதவியும் தொழில்நுட்பமும் மளிகைக் கடை வியாபாரி முதல் உள்ளூர் பலசரக்குக் கடை வரையில் உள்ள அத்தனை வணிகர்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் சிறு தொழில் வணிகர்கள் தங்களது விற்பனைப் பொருள்களை இமேஜிங் செய்வது, பட்டியலிடுவது, லாஜிஸ்டிக்ஸ், சேமிப்பு மற்றும் கிடங்கு, விளம்பரம், வருவாய் மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை மற்றும் பல உள்ளடக்கிய சேவைகளைப் பெற முடியும்.

  நீங்கள் ஒரு குறுந்தொழில் நிறுவனரா? அல்லது பெண்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறுதொழில் நிறுவனரா? அப்படியானால் Amazon.in உடன் இணைவதற்கு இதுவே சரியான நேரம். சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அமேசான் ஆன்லைன் வணிக விற்பனைத் தளம் வருகிற டிசம்பர் 16, 2018 அன்று ‘அமேசான் சிறு தொழில் தினம்’ கொண்டாட உள்ளது.

  இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்? உங்களுக்குப் பிடித்தமான கலைநயம் மிக்க பொருளை வாங்க நீங்கள் அலிகார் பயணம் செய்யத் தேவையில்லை. Amazon.in தளத்தில் ஒரிசா கைத்தறிப் பொருட்களையும், ஜெய்பூரிலிருந்து மண்பாண்டப் பொருட்களையும் எளிதாக வாங்கலாம். இதுபோல இந்தியாவின் பல்வேறு இடங்களில் கிடைக்கும் தனித்துவம் வாய்ந்தப் பொருட்களை Amazon.in தளத்தில் வாங்கலாம்.

  Kala Haat, Amazon Saheli, Amazon Select and Amazon Launchpad மூலம் ‘அமேசான் சிறுதொழில் தினம்’ வாடிக்கையாளர்கள் பல அரிய பொருட்களை உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பைத் தருகிறது. உள்ளூர் வியாபாரிகளின் பொருட்களை அதிரடி சலுகைகள், கேஷ் ஆஃபர் என பல தள்ளுபடிகளுடன் ஷாப்பிங் செய்யலாம். ஒரு முறை சலுகையாக #AmazonSmallBusinessDay அன்று உள்ளூர் வியாபாரிகளின் வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலும் துவக்க நாள் சலுகையாகவும் டிசம்பர் 16-ம் தேதி நள்ளிரவு முதல் வாடிக்கையாளர்கள் 10 சதவிகித கேஷ் பேக் சலுகையும் பெறலாம்.

  #AmazonSmallBusinessDay பொருட்களுக்கான வணிகத் தளமாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு வணிகரின் முயற்சியையும் பின்னணியையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

  Amazon.in உடன் வளர்ந்த வணிகர்களின் கதைகளை இந்த வீடியோவில் பாருங்கள்.   

  சிறந்த பொருட்களை Amazon.in -ல் வாங்க நீங்கள் தயாரா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: