விதிமீறல்களில் ஈடுபடும் அமேசானுடன் குஜராத் அரசு ஒப்பந்தம் - CAIT கடும் கண்டனம்

அமேசான்

ஆன்லைன் மகாநிறுவனமான அமேசானுடன் குஜராத் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதையடுத்து அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) கடும் விமர்சனம் செய்துள்ளது.

 • Share this:
  ஆன்லைன் மகாநிறுவனமான அமேசானுடன் குஜராத் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதையடுத்து அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) கடும் விமர்சனம் செய்துள்ளது.

  அமெரிக்க நிறுவனமான அமேசான் சந்தைப் போட்டி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக அனைத்திந்திய வர்த்தகக் கூட்டமைப்பு சாடியுள்ளது. ஆனால் அமேசான் நிறுவனம் என்ன கூறுகிறது என்றால் குஜராத் மாநிலத்தின் தொழில் மற்றும் சுரங்கத் துறையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது மாநிலத்தின் ஏற்றுமதியை வளர்க்கவே என்று கூறுகிறது.

  அமேசான் - குஜராத் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அமேசான் நிறுவனம் மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கு அமேசான் உலகளாவிய விற்பனை குறித்து பயிற்சி அளிக்கும். இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்கள் லட்சக்கணக்கான அமேசான் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வழிவகை செய்யப்படும். 200 நாடுகளுக்கு குஜராத் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி துறை பொருட்கள் சென்றடையும் என்கிறது அமேசான் நிறுவனம்.

  இதனையடுத்து அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு எழுப்பியுள்ள கண்டனத்தில், “குஜராத் வர்த்தகர்கள் மட்டுமல்ல நாடு முழுதுமுள்ள வர்த்தகர்கள் குஜராத் அரசின் இந்தச் செயலினால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர். அதாவது தெரிந்தே சட்டத்தை மீறும் அமெரிக்க நிறுவனத்துடன் குஜராத் அரசு கைகுலுக்குகிறது நிச்சயமாக நாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம்.

  ஒருபுறம் மத்திய அரசின் சட்ட நிறுவனங்களான சிசிஐ, அமலாக்கத்துறை ஆகியவை அமேசான் நிறுவனத்தின் விதிமீறல்களைக் கண்காணித்து விசாரித்து வருகிறது ஆனால் மற்றொரு புறம் குஜராத் அரசு விற்பனையை, ஏற்றுமதியை அதிகரிக்க இந்த நிறுவனத்துடன் கைகுலுக்கி வருகிறது. அமேசான் நிறுவனத்தின் சட்ட மீறல்கள் குறித்து இந்தியா முழுதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஆனால் குஜராத் அரசு அமேசானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்கிறது!” என்று சாடியுள்ளது.

  மேலும் இந்த விவகாரத்தை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் எடுத்துச் செல்லவிருப்பதாக வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: